திருந்தாத வடிவேலு.. ஆணவ திமிரால் மீண்டும் தமிழ் சினிமாவில் இருந்து விரட்டியடிக்கப்படும் வடிவேலு.!!

0
Follow on Google News

நடிகர் வடிவேலு 1991 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி,குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தவர் வடிவேலு. காமெடி நடிகராக சுமார் 15 வருடங்களுக்கு மேலாக யாரும் தன்னை அசைக்க முடியாத உயரத்தில் முன்னணி காமெடி நடிகராக, முன்னனி நடிகர்களுக்கு சமமான அந்தஸ்துடன், தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் வடிவேலு.

வருடத்திற்கு சுமார் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்து பிசி நடிகராக இருந்து வந்தார் வடிவேலு. ஆனால் அவரின் தலைக்கனம், ஆணவ திமிரு காரணமாக 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போய்விட்டார். வடிவேலு நடிக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள் மத்தியில் ஆணவத்தில் நடந்து கொண்டது தான் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணம் என்று ஒரு பக்கம் இருந்தாலும்.

அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு எதிராக இவர் செயல்பட்டதால், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு பின்பு இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது என்பதும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து வருடங்கள் பல வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் வகையில் நாய் சேகர் என்கின்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

10 வருடம் வனவாசத்தை அனுபவித்துவிட்ட வடிவேல், இனிமேல் பொறுப்பாக நடந்து கொள்வார் என்று சினிமா துறையினர் எதிர்பார்த்த நிலையில், அவருடைய நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார்கள். நாய் சேகர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்பு முடிந்து படம் வெளியாவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்.

நாய்சேகர் படத்தின் இயக்குனரிடம், எனக்கு இந்த படத்தில் ஒரு பாடல் வைத்து ஆக வேண்டும் என்று வடிவேலு பிடிவாதம் பிடித்துள்ளார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்டது என்று எவ்வளவோ இயக்குனர் எடுத்துக் கூறியும், கேட்காத வடிவேலு அதெல்லாம் தெரியாது எனக்கு ஒரு பாடல் இந்த படத்தில் வைத்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து ஒரு பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் வெறும் ஒரு கோடி ரூபா மட்டும் சம்பளம் வாங்கி அடக்க ஒடுக்கமாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடித்துக் கொடுத்து வரும் வடிவேலு. லாரன்ஸ் கெஸ்ட் ரோலாக நடிக்கும் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில் வடிவேலுவிற்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த படத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

ஆனால் வடிவேலு தனக்கு சம்பளம் 5 கோடி கேட்க அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து மூன்று கோடி வரை தான் கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வடிவேலு தனக்கு ஐந்து கோடி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து நீங்கள் நடிக்கும் நாய் சேகர் படம் வெளியான பின்பு அந்த படம் ஹிட்டானால் உங்களுக்கு ஐந்து கோடி தருகிறோம். அந்த படம் சரியாக போகவில்லை என்றால் 3 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளனர்.

அதெல்லாம் முடியாது என்று திட்டவட்டமாக வடிவேலு மறுக்க, பின்பு அந்த படத்தில் இருந்து வடிவேலுவை தூக்கிவிட்டு யோகி பாபுவை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல், மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, அவருடைய தலைக்கணம், ஆணவ திமிரினால் மீண்டும் தமிழ் சினிமாவில் இருந்து வடிவேலு விரட்டி அடிக்கப்பட்டு நிரந்தரமாக வீட்டில் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.