காமெடி நடிகர் போண்டாமணி சிறுநீரகம் செயல் இழந்து உடனே சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு தனக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார் போண்டாமணி. போண்டாமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த பொழுது நேரடியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை நேரில் சந்தித்தார் மறைந்த நடிகர் மனோபாலா.
அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த மனோபாலா, நீண்ட நேரம் போண்டாமணி விவகாரம் குறித்து பேசியுள்ளார், அப்போது போண்டாமணி போன்ற நடிகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக நடிப்பவர்கள். அவருக்கு என்ன சம்பளம் கிடைத்து விடப் போகிறது. மேலும் போண்டாமணி போன்றவர்களின் வாழ்க்கை முறை என்ன.? இவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என மனோபாலா தெரிவித்த உடன்,
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் மா சுப்பிரமணியன். இவ்வளவு தான் சார் இவங்க வாழ்க்கை, பெருசா ஒன்னும் இல்ல சார், சூட்டிங் இருந்தால் தான் சாப்பாடு. இல்லைன்னா ஒன்றுமில்லை, விவேக் மாதிரி நடிகர்கள் யாராவது சப்போர்ட் இருந்தால் தான் இவர்களால் வாழ்க்கையே நடத்த முடியும். அவர்களெல்லாம் கூப்பிடவில்லை என்றால் ஏதாவது ஒரு கோவில் திருவிழா, ஆடல் பாடல் நிகழ்ச்சி கலந்து கொண்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்கை ஓடும் என மனோபாலா சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியுடன் தெரிவித்து இருக்கிறார்.
மனோபாலா போண்டாமணியை பற்றி அழுத்தமாக சொன்ன பின்பு தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனடியாக போண்டாமணிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த வகையில் ஒரு கலைஞனின் உயிரை காப்பாற்றியுள்ளமனோபாலா, அதுமட்டுமின்றி இதன் பின்பு போண்டாமணியின் வீட்டிற்கு நேரடியாக சென்று சில உதவிகளை செய்துள்ளார்.
மேலும் போண்டாமணிக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுத்து எதற்கும் கவலைப்படாதே உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, சீக்கிரம் குணமாயிருவ என்று ஆறுதல் தெரிவித்து வந்தவர் மனோபாலா இப்படி பலர் கஷ்டத்தில் பங்கேற்ற மனோபாலா கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லை அல்லது படுக்க படுக்கையாக இருக்கிறார் என எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், திடீர் என்று மனோபாலா மரணம் அடைந்து விட்டார் என்கின்ற செய்தி பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில் போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, திருச்செந்தூர் கோவிலுக்கு வடிவேல் வருவதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் வடிவேலுவை சூழ்ந்து கொன்டு போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி கேட்ட போது, அதற்கு வடிவேலு, என்னுடன் பல படங்களில் உடன் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன் என்று வடிவேலு தெரிவித்தார்.
ஆனால் வடிவேலுவின் பேட்டியை பார்த்த போண்டாமணி மிகுந்த எதிர்பார்ப்புடன் வடிவேலு தனக்கு உதவி செய்வார் என ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால் வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியை தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு வடிவேலு உடல் நலம் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.
திருச்சந்தூரில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும் நிச்சயம் போண்டாமணிக்கு உதவி செய்வேன் என்று வெறும் வாயால் வடை சுட்டு விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். வடிவேலு உடன் துணை நடிகராக பல படங்களில் நடித்த போண்டாமணி உயிருக்கு போராடி வந்த சுழலில் கூட உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் கூட விசாரிக்காத வடிவேலு இருக்கும் அதே சினிமா துறையில் இருந்த மறைந்த நடிகர் மனோபாலா தான் நடிகர் போண்டாமணி மறு பிறவி எடுக்க பெரும் உதவி செய்துள்ளார் என கூறப்படுகிறது.