நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் என் ராசாவின் மனசிலே படத்தில் தமிழ் சினிமாவில் வடிவேலு அறிமுகமானார். அதன்பிறகு விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று பலர் தெரிவித்தும், விஜய்காந்த், கடைசி வரை என்னுடன் வரட்டும் ஒரு சின்ன கேரக்டரில் போட்டுவிடுங்கள் என்று விஜயகாந்த் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பை பெற்று தந்தார்.
குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை சினிமாவில் அடைந்த வடிவேலு. அவருடைய அலுவலகம் பக்கத்தில் விஜயகாந்த் அக்கா வீடு உள்ளது. விஜயகாந்த் அக்கா கணவர் இறந்து போது அவர் அலுவலகம் முன்பு இறப்புக்கு வந்தவர்கள் காரை நிறுத்தியுள்ளார்.அப்போது அங்கு வந்த வடிவேலு காரை எடுங்க என சொல்ல, அவர்கள் கேப்டன் அக்கா இறந்துவிட்டார் இறந்துட்டாங்க என்று தெரிவித்துள்ளார்கள்.
எந்த கப்பலுக்கு கேப்டன் என்று வடிவேலு திமிராக பேச, அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடிவேலுவின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விஜயகாந்தை நேரடியாக எதிர்க்க தொடங்கிய வடிவேலு, பொது இடங்களில் மிக கடுமையாக அநாகரிகம் விஜயகாந்தை பேசி உள்ளார். இந்நிலையில் வடிவேலு குறித்து ஒரு முக்கியமான சம்பவம் ஒன்றை நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பேசியியுள்ளார்.
அதில் ஒரு நாள் டப்பிங் ஸ்டூடியோவில் வடிவேலுவை பார்த்தபோது அவர் ஒரு பட வாய்ப்பு இருப்பதாக மீசை ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார். உடனே அதற்கு சரி என மீசை ராஜேந்திரன் சொன்னதும், அப்படத்தின் இயக்குனருக்கு போன் போட்டு மீசை ராஜேந்திரன் பற்றி வடிவேலு தெரிவித்துள்ளார். அவரும் ஓகே சொல்லிவிட்டதால் நாளைக்கு ஷூட்டிங்கிற்கு வருமாறு வடிவேலு கூறிவிட்டு சென்றுள்ளார்.
வடிவேலு பேச்சைக் கேட்டு மீசை ராஜேந்திரன் ஷூட்டிங் சென்றுள்ளார். ஆனால் அங்கு மீசை ராஜேந்திரனுக்கு தருவதாக சொன்ன கேரக்டரில் பெசண்ட் ரவியை நடிக்க வைத்துள்ளார்கள். பின்னர் அந்த ஷாட் முடிந்ததும் வடிவேலுவை பார்த்து மீசை ராஜேந்திரன் கேட்டதற்கு, அவர் நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியது என மூஞ்சில் அடிச்சமாதிரி பேசியுள்ளார்.
மீசை ராஜேந்திரனுக்கு பயங்கர கோபம் வந்துள்ளது. இது ரொம்ப அவமானப்படுத்துற மாதிரி இருக்கு, தயவு செய்து இதுபோல் வேறு எந்த நடிகரிடமும் இப்படி செய்யாதீங்கனு சொல்லிவிட்டு அங்கிருந்து மீசை ராஜேந்திரன் கிளம்பி விட்டார். அடுத்த 2 நாள் கழித்து விஜயகாந்த் அலுவலகம் மீசை ராஜேந்திரன் போனபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று விஜயகாந்த் கேட்டுள்ளார்.
அப்போது நான் நடந்ததை மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். எதாவது பண்ணிட்டு வந்துருக்கலாம்ல என்று சொல்லிவிட்டு , இதை நான் சொல்லிக்காட்ட கூடாது ஆனால் உன்னை அசிங்கப்படுத்திருக்காரு அதனால சொல்றேன். சின்ன கவுண்டர் படத்தில் நடித்தபோது மாற்று துணி இல்லாம வடிவேலுக்கு நான் வேட்டி சட்டை வாங்கி கொடுத்தேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.