இறங்கமின்றி நடந்து கொண்ட வடிவேலு… கடவுள் போன்று கருணை காட்டிய சிம்பு.. அந்த மனசு தான் சார் கடவுள்..

0
Follow on Google News

ஆந்திராவைச் சேர்ந்த காமெடி நடிகரான வெங்கல் ராவ், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நடித்து வருகிறார். முதலில், ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த இவர், பிறகு தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். பிறகு, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து, பல படங்களில் காமெடியனாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆனால், வடிவேலுவுடன், ஏகப்பட்ட பேர் துணை காமெடி நடிகர்களாக நடித்துள்ள நிலையில், பலரது நிலைமையும் தற்போது படுமோசமாகவே இருக்கிறது. அந்த லிஸ்டில் தான் தற்போது வெங்கல் ராவ்வும் இணைந்துள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த போண்டா மணிக்கே, கடைசிவரை வடிவேலு உதவாமல் இருந்த நிலையில் அவரது உயிரும் பிரிந்து விட்டது.

இந்நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை, என்னால் பேசக்கூட முடியாது, சினிமா நடிகர்கள் யாராவது உதவி செய்யுங்கள் என வெங்கல் ராவ் கண்கலங்கி வெளியிட்ட வீடியோவை பார்த்து, இவருக்காவது வடிவேலு உதவி செய்வாரா என்றும், சக நடிகர்களுக்கு உதவி செய்யாமல் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்து என்ன பண்ண போறீங்க என, ரசிகர்கள் வடிவேலுவை சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரின் காம்பினேஷனும் ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்படும் காம்பினேஷன் ஆகவே இருந்தது. குறிப்பாக, ‘தலையில் இருந்து கை எடுத்தா கடிச்சிடுவியா’ என்ற நகைச்சுவையாக இருக்கட்டும், அல்லது கந்தசாமி படத்தில், ‘தேங்காய் வாங்க சென்று ஊசியை வைத்து வடிவேலுவை குத்தியது’ என பல காமெடிகளை இப்படி குறிப்பிட்டு அடுக்கிக் கொண்டே செல்லலாம், அந்த அளவிற்கு இவர்களின் காமெடிகள் ஹிட் ஆகியிருந்தது.

பின்னர், 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வடிவேலு ஆறு வருடங்களுக்கும் மேலாக சினிமாவிலேயே நடிக்காமல் இருந்தார். வடிவேல் நடிக்காமல் இருந்தது, பல துணை நடிகர்களையும் பாதித்தது. அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டனர். இது ஒரு புறம் இருக்க, பல துணை காமெடி நடிகர்கள் வடிவேலுக்கு எதிராக திரும்பினார். இவர் பொறாமை பிடித்தவர், எங்களை நடிக்க விடாமல் செய்துவிட்டார் என, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இப்படி திரைத்துறையே வடிவேலுவை தூற்றிய போதிலும், காமெடி நடிகரான வெங்கல் ராவ் மட்டும்தான், வடிவேலு சார் என் மீது பாசம் கொண்டவர், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார், சோறு போட்டவர் என பாராட்டி தள்ளினார். மேலும், வடிவேலுவுடன் இருந்தவர்கள் இன்று வரை அவரை திட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை கிடையாது என வடிவேலுக்கு ஆதரவாக பல கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

எனவே, இப்படி வடிவேலுவை விட்டுக் கொடுக்காத இந்த மனிதருக்காவது வடிவேலு, மருத்துவ செலவிற்காக உதவி செய்வாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தன் மருத்துவ செலவிற்காக உதவி கோரிய வெங்கல்ராவுக்கு நடிகர் சிம்பு முதல் ஆளாக உதவி கரம் நீட்டி உள்ளார். கை, கால்கள் செயலிழந்து சிகிச்சை பெறும் இவருக்கு இரண்டு லட்சம் ரூபாயை அவர் வழங்கி இருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அவரது உதவியாளரிடம் வெங்கல் ராவின் தொலைபேசி எண்ணை உதவி செய்வதற்காக கேட்டு வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here