தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், காமெடியனாகவும் கொடிகட்டி பறந்த நடிகர் வெங்கல் ராவ், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்த நிலையில், திரைத்துறையினர் யாராவது என் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் வடிவேலுவின் பல படங்களில் துணை காமெடியனாக நடித்த வெங்கல் ராவுக்கு, வடிவேலு உதவுவாரா அல்லது, தற்போதும் கஞ்சனாக தான் இருப்பாரா என பலரும் விமர்சித்து வந்த நிலையில், அவர்களின் வாயை அடைக்கும் விதமாக அவர் வெங்கல் ராவுக்கு பெரும் உதவி செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு தான்.
ஆனால் கடந்த 10 வருடங்களில் வடிவேலுவை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்து, அவர் பொறாமை பிடித்தவர், திமிரு பிடித்தவர் என பல முத்திரைகளை குத்தி வைத்திருந்தனர். மேலும் புலிகேசி இரண்டாம் பாகத்தில், இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் இடையே நிறைய தகராறுகள் ஏற்பட்டு, நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என வடிவேலு பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறியிருந்தார்.
இதனால் அவர் சில வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், அதன் பிறகு சில படங்களில் நடிக்க தொடங்கிய அவருக்கு, கடந்த வருடம் வெளியான மாமன்னன் படம் ஒரு சிறந்த Come Back-ஆக அமைந்திருந்தது. இந்நிலையில் தான் நடிகர் வடிவேலு, ‘தான் உண்டு, தன் வேலையுண்டு’ என இருக்கும் நிலையில், பலரும், தன்னுடன் பல படங்களில் நடித்த துணை காமெடி நடிகரான வெங்கல் ராவுக்கு, வடிவேலு உதவ வேண்டியதுதானே என்றும், அவருடன் பணியாற்றியவர்களுக்கு கூடவா உதவ மனம் வரவில்லை, கல்நெஞ்சக்காரர் என கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதாவது காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நிலை குறைவு ஏற்பட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து, நடிகர் சிம்பு முதல் ஆளாக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்திருந்தார். பிறகு சிம்புவை தொடர்ந்து, தொடர்ச்சியாக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும், KPY பாலாவும் ஒரு லட்சம் ரூபாய் அளித்திருந்தார், மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் 25 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தார்.
இந்நிலையில்தான், பல நிகழ்ச்சிகளில் ஒரு முறை கூட வடிவேலுவை விட்டுக் கொடுக்காமல் பேசிய வெங்கல் ராவுக்காவது நடிகர் வடிவேலு உதவி செய்வாரா என்றும், அவர் கந்தசாமி, எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என பல படங்களில் துணை காமெடி நடிகராக அவருடன் சேர்ந்து நடித்து அசதி இருக்கிறார், அப்போது கூடவா உதவி செய்ய மனம் வரவில்லை என, ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருந்தனர்.
இருப்பினும், வடிவேலு இந்த முறையும் அமைதி காத்து வந்த நிலையில், இவர் கஞ்சன், யாருக்கும் உதவ மாட்டார், கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தாலும் ஒரு பயனும் இல்லை என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத விதமாக வெங்கல் ராவுக்கு, நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை அளித்து உதவி செய்ததோடு, போனிலும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
இதனைப் பார்த்து திரை உலகமே ஷாக் ஆனதோடு, வடிவேலும் நல்ல மனிதராக மாறிவிட்டார் போல் என்றும் கூறி வருகின்றனர். மேலும் காமெடி நடிகரான கிங்காங்கும், வடிவேலு சார் வெங்கல் ராவின் மருத்துவ செலவிற்கு ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டார் என நெகழ்ச்சி அடைந்து ட்வீட் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.