வடிவேலு கதையான விஜயின் பேச்சு… எதற்கு இந்த பித்தலாட்டம் விஜய் உங்களுக்கு…

0
Follow on Google News

சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்பு தான் விழா நிகழ்ச்சி உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் சிகரெட், புகையிலை, பான்பரா போன்ற பொருள்கள் ஏதாவது இருக்கின்றதா என்று தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

பரி சோதனையில் புகையிலை பொருட்கள் இருந்தால், அந்த பொருட்கள் பறிமுதல் செய்த பின்பே, அவர்கள் அந்த நிகழ்வுக்கு அனுமதிக்க பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சமீபத்தில் நடத்திய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, புகையிலை இல்லாத ஒரு நிகழ்வாகவே நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்வு மிக பெரிய அளவில் பாராட்டும் வகையில் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு முதல் நாள் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடிகர் விஜய்யின் முரண்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாணவர்கள் சந்திக்கும் விஜய் நிகழ்ச்சியில் வந்த ஒவ்வொருவரையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்பு, குறிப்பாக புகையிலைப் பொருட்கள் இருக்கிறதா.? என தீவிரமாக பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்படி ஒழுக்க நெறிகளுடன் விஜய் நடத்தும் நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் புகை பிடிப்பது போன்று விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி இருப்பது, இதில் எந்த முகம் விஜய்யின் உண்மையானது என்கின்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

இதில் புகையிலைக்கு எதிரானவரா.? விஜய் அல்லது அவர் லியோ படத்தின் போஸ்டரில் விஜய் புகைபிடிபக்கும் காட்சியில் உள்ளது போன்று புகையிலையை விரும்புகின்றவரா.? விஜய் என்கின்ற விளக்கத்தை விஜய் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் விஜய். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான சர்க்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றபோது மிகப்பெரிய சர்ச்சை விஜய்க்கு எதிராக வெடித்தது.

அதை மனதில் வைத்தாவது இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் விஜய் சமூக பொறுப்புணர்வுடன் லியோ படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெறாத வகையில் நடந்திருக்க வேண்டும். குறிப்பாக விஜய் நடிக்கும் லியோ படத்தின் போஸ்டர், விஜயின் ஒப்புதல் இல்லாமல் வெளி வந்திருக்காது. அப்படி இருக்கும்போது தன்னுடைய போஸ்டரில் புகை பிடிப்பது போன்று காட்சி இருப்பதற்கு, சமூகத்தின் மீது இருக்கும் அக்கறையை மனதில் வைத்து அதை விஜய் அனுமதித்திருக்கக் கூடாது.

ஆனால் தன்னுடைய படத்தின் இது போன்ற அக்கறையின்மையால் செயல்பட்டு விட்டு, மாணவர் மாணவிகள் சந்திப்பின்போது புகையிலை இல்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி நடத்துவது விஜயின் நேர்மையின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டரில் விஜய் பிடிப்பது போன்ற காட்சி வெளியானது பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இப்படிப்பட்ட ஒரு போஸ்டர் வெளியாகும் போது, அது சர்ச்சையாக வெடிக்கும் இதனால் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும் என்கின்ற ஒரு பப்ளிசிட்டிக்காக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு பப்ளிசிட்டி விஜய்க்கு தேவை தானா.? என்கின்ற ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.