திருந்தாத வடிவேலு…படப்பிடிப்பில் பி.வாசு உடன் மோதல்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் கதாநாயகர்களுக்கு சமமான சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகர்களுக்கான அந்தஸ்துடன் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்தவர்.முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு அடுத்து படத்தின் கதாநாயகனிடம் கால்சீட் வாங்கும் காலமும் இருந்தது, நடிகர் வடிவேலு ஒரு உயரத்துக்கு வந்த பின்பு அவருடைய திமிரான நடவடிக்கையால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அடுத்து வடிவேலு வைத்து படம் எடுப்பதற்கு தயக்கம் காட்டினார்கள்.

இதனால் சுமார் பத்து வருடம் சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார் வடிவேலு. இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் வடிவேலு. அந்த வகையில் தற்பொழுது நாய் சேகர் ரிட்டர்ன் என்கின்ற படத்தில் கதாநாயகனாகவும் சந்திரமுகி 2 படத்தில் காமெடி நடிகனாகவும் நடித்து வருகிறார். சந்திரமுகி 2 படத்தில் வடிவேலும் நடிக்கும் காமெடி காட்சிகளை இயக்குனர் பி வாசு எடுத்து வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வேளையில் நாய் சேகர் படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. வடிவேலுக்கு நாய் சேகர் படத்தில் தான் அவருடைய கவனம் முழுக்க முழுக்க இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் வடிவேலு காமெடியனாக நடிப்பதை விட கதாநாயகனாகவே நடிப்பதை அதிகம் விரும்புகிறார். அதனால் நாய் சேகர் படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடித்து விட்டு சந்திரமுகி 2 படத்தில் நடிக்க வருவதாக வருகிறேன் என்று இயக்குனர் வாசுவிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு இயக்குனர் வாசு, இன்னும் ஒரு நாள் மட்டும் நீங்கள் நடித்தால் போதும், காட்சி முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டு விடும், இல்லையென்றால் நீங்கள் வரும் வரை இந்த காட்சி பாதியிலே நிற்கும் என்று வாசு தெரிவித்துள்ளார். அதற்கு வடிவேலு என்னால் முடியாது நான் உடனே நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடும் தொந்தரவு செய்து வந்துள்ளார் வடிவேலு.

நாய் சேகர் மற்றும் சந்திரமுகி 2 படத்திற்கு ஒரே தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம். இதனால் இந்த பிரச்சனையை கையில் எடுத்த லைக்கா நிறுவனம், முதலில் சந்திரமுகி படத்தில் நடிக்கும் இந்த காட்சியை முடித்து விடுங்கள், பிறகு நீங்கள் நாய் சேகர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பிலும் வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார்கள், ஆனால் அதற்கு வடிவேலு ஒப்புக்கொள்ளவில்லை.

நான் உடனே நாய் சேகர் படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வடிவேலு மற்றும் இயக்குனர் வாசு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வடிவேலு பிடிவாதமாக இருப்பதை அறிந்த பி வாசு, நீங்கள் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றால்,இந்த காட்சியவே நான் இந்த படத்தில் இருந்து எடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு வடிவேலு, பரவாயில்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டு சந்திரமுகி படத்தின் பாதி படப்பிடிப்பிலே விட்டுவிட்டு நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த பி வாசு வடிவேல் நடித்த அந்த பாதி காட்சியையும் படத்தில் இருந்து எடுத்து விட்டார். பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு திருந்துவதாக தெரியவில்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.