அண்ணே.. அண்ணே என என்னிடம் கெஞ்சி சான்ஸ் கேட்ட வடிவேலு… பின்பு அவர் புத்தியை காட்டிவிட்டார்..

0
Follow on Google News

நடிகர் ராஜ்கிரணால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு, காமெடி திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இன்று வரை வடிவேலு காமெடிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சினிமாவில் அனைவரையும் சிரிக்க வைக்கும் காமெடியனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் சக நடிகர்களின் வளர்ச்சி பிடிக்காமல் சுயநலவாதியாக இருப்பார் என்று வடிவேலு மீது நிறைய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வைக்கப்படுகின்றன.

தமிழ் சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த காமெடியனாக கலக்கி வந்த வடிவேலுக்கு, இடையில் சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால், சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார். அதன் பிறகு மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார்.

என்னதான் இரண்டாவது இன்னிங்ஸில் காமெடியனாக என்ட்ரி கொடுத்திருந்தாலும், வடிவேலுவின் காமெடி கவுண்டர்கள் ரசிக்கும் படியாக இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து இருந்தனர். மேலும் கேப்டன் விஜயகாந்த் மறைவின்போது, அவருக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு நேரிலும் செல்லாமல், சமூக வலைத்தளங்களில் கூட இரங்கலும் தெரிவிக்காமல் இருந்ததால் இணையவாசிகள் வடிவேலுவை இணையத்தில் கடுமையாக விமர்சித்து கிழித்து தொங்க விட்டனர்.

சினிமாவில் ஒரு முகம் நிஜத்தில் ஒரு முகம் என்று கமெண்ட்களில் அவரை சரமாரியாக திட்டி தீர்த்து விலாசினர். அதைத்தொடர்ந்து, சினிமாவில் அவருடன் பணிபுரிந்த சக காமெடி நடிகர்கள் பலரும், வடிவேலு யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்றும், அதே சமயம் தன்னுடன் பணிபுரியும் சக நடிகர்களை வளர விட மாட்டார் என்றும் பல்வேறு youtube சேனல் பேட்டிகளில் ஓபன் ஆக கூறி இருந்தனர்.

சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய ராஜ்கிரனையே மதிப்பதில்லை, வடிவேலு நன்றி கெட்டவர் என்றெல்லாம் பலரும் கூறி இருக்கின்றனர். இந்நிலையில், லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த. காமெடி நடிகர் சாமிநாதன் பேட்டி ஒன்றில் பேசிய போது வடிவேலுவின் ஆரம்ப காலம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், வடிவேலு நடிகர் ராஜ்கிரன் ஆபீஸில் ஆபீஸ் பாயாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவர் ராஜ்கிரனிடம் ‘அண்ணே படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க அண்ணே’ என்றுதான் கெஞ்சுவார்.

ராஜ்கிரன் அறிமுகப்படுத்திய பிறகு வடிவேலு படிப்படியாக வளர்ந்து விட்டார். பல வருடங்களுக்கு பிறகு வடிவேலுவுடன் ஆறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சினிமாவில் பீக்கில் இருந்தார். ஆறு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் டயலாக் பேசுவதற்கு முன்பு என்னிடம் வந்து, “என்னங்க டயலாக் எல்லாம் பாத்துட்டீங்களா” என்று கேட்பார். நான் ஆமாம் என்று சொல்வேன்.

அதன் பிறகு நான் டயலாக் சொல்ல ஆரம்பிக்கும்போதே “அதை கொஞ்சம் மாத்துங்க நல்லா இல்லை” என்று சொல்லிக் கொண்டே இருப்பார். தொடர்ந்து என்னை இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அவரிடம் “நீங்க நல்ல நடிகர் தான். என்னுடைய நடிப்பில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் மாற்றிக் கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் ஆரம்பிப்பதற்கு முன்பே நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள்” என்று பட்டென்று கூறிவிட்டேன் ” என்று சாமிநாதன் கூறியுள்ளார். லொள்ளு சபா சாமி நாதனே போலவே வடிவேலு உடன் அடித்த பல நடிகர்களும் வடிவேலுவின் இன்னொரு முகம் குறித்து பேட்டிகளில் ஓப்பனாக கூறியிருக்கின்றனர். இதனால் தமிழ் ரசிகர்கள் பலரும் வடிவேலுவை அடியோடு வெறுத்ததோடு மட்டுமின்றி, கடுமையாக ரோஸ்ட் செய்து வருகின்றனர்.