இந்த உலகில் திருடு என்பது பலவகையில் உண்டு, பிட் பாக்கெட் தொடங்கி சினிமாவில் கதை திருட்டு வரை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திருடி வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர் நூதன முறையில் திருடி கையும் களவுமாக மாட்டி இதெல்லாம் ஒரு பொழப்பா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையை சீரழித்து விட கூடாது என்பதற்காக தன்னுடைய ரசிகர்மன்றத்தை களைத்து ரசிங்கர்கள் அவரவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழியை தேடுங்கள் என அறிவுறுத்தியவர்.
மேலும், சமீபத்தில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் அஜித்குமார் அல்லது AK என்று அழைத்தால் போதும் என அன்பு கட்டளையிட்டார் அஜித்குமார். இப்படி தன்னுடைய சுய லாபத்துக்காக எந்த ஒரு இடத்திலும் அப்பாவி ரசிகர்கள் பாதிக்கப்பட்ட கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார் அஜித்குமார். ஆனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அஜித் பெயரை பயன்படுத்தி வருவது வருந்ததக்க ஓன்று.
நம்முடைய தினசேவல் போன்று பல ஊடகங்கள் வேலைக்கு ஆட்களை பணியமர்த்தில், அவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை பல கட்டமாக விசாரித்து உறுதி செய்து, அதை செய்தியாக உங்களுக்கு கொடுத்து வருகிறோம். ஒரு தகவல் கிடைத்த உடனே அதை செய்தியாக வெளியிடாமல். கிடைத்த தகவல் தொடர்புடைய அந்த வட்டாரத்தில் நன்கு விசாரித்து நமக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பலரின் கடினமான உழைப்பின் மூலம் செய்தியாக வெளியிட்டு வருகின்றோம்.
ஆனால் Top news என்கிற பெயரில் இணையதளம் நடத்தும் அஜித் ரசிகர்கள், நம்முடைய தினசேவல் நியூஸில் வெளியாகும் பெரும்பாலான செய்திகளை திருடி, அந்த செய்தியின் புகைப்படம் மற்றும் தலைப்புகளை மட்டும் மாற்றி அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டு அடுத்தவர்கள் உழைப்பை நூதன முறையில் திருடி வருகின்றனர் Top News என்கிற பெயரில் இயங்கி வரும் இணையதள பக்கம். இந்த Top News இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் முகநூலில் Ajithnewz என்ற பெயரில் இயங்கும் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
பலர் உழைப்பில் உருவாகும் ஒரு செய்தியை, புகைப்படம் மற்றும் தலைப்புகளை மட்டும் மாற்றிவிட்டு வெளியிட்டு பணம் சம்பாரிக்கும் அஜித் ரசிகர்கள் தான், நடிகர் விஜய் திருட்டு கதையில் நடித்தார் என கேலி கிண்டல் செய்து வருவது ஒரு கேலிக்கூத்தான ஓன்று, மேலும் இந்த திருட்டு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர் குழுவுடன் நமது தினசேவல் நியூஸ் குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் விரைவில் அடுத்தவர்கள் உழைப்பை திருடும் அஜித் ரசிகர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் அஜித் சொன்ன அதே வசனம் தான், வாழு ..வாழ விடு என்பதை அஜித் ரசிகர்கள் உணர்ந்து. அடுத்தவர்கள் உழைப்பை திருடாமல் அவர்களை வாழ விடுங்கள், நீங்களும் சுயமாக உழைத்து வாழ்ந்து உங்கள் தலைவன் அஜித்குமார் பெயரை காப்பாற்றுங்கள் என்பதே தமிழக மக்களின் அஜித் ரசிகர்களுக்கான அறிவுரையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.