பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட உதயநிதியின் திரைப்படம்.. வாயை பிளக்கும் தமிழ் திரையுலகம்..

0
Follow on Google News

தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பொருப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமனிதன்’ தான் என்னுடைய கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்சில் ஒரு படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது மேலும் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளது, கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்கின்ற முடிவை மாமன்னன் படத்தில் கமிட்டாகும்போது எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானை அணுகிய போது அதற்கு ஆரம்பத்தில் அவர் மறுத்துவிட்டதாகவும். அதன் பின்பு உதயநிதி ஸ்டாலின் இதுதான் என்னுடைய கடைசி படம் அதனால் நான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முன்பு ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

கண்டிப்பா நீங்கள் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பின்பு தான், ஏ ஆர் ரகுமான் மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் படத்திற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அவருடைய மாமன்னன் படத்தின் விற்பனை மிக பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாமன்னன் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் சுமார் 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் உதயநிதி நடித்த படம் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்த சினிமா துறையினர் பலர் வாயை பிளந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் இது மாரி இயக்குனர் மாரி சக்கரவர்த்தியின் படம் என்பதால் ஏற்கனவே மாரி சக்கரவர்த்தி இயக்கத்தில் கர்ணன் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், உதயநிதி ஸ்டாலின் நடித்த அடுத்து இயக்குனர் மாரி சக்கரவர்த்தி இயக்கத்தில் இருக்கும் மாமன்னன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே அந்த படத்தின் டிஜிட்டல் ரைஸ் 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.