டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்ட பைக் ஓட்ட முடியாத பரிதாபம்… சோகத்தில் அவரது ரசிகர்கள்…

0
Follow on Google News

உயர் ரக பைக்குகளில் சாகங்களை செய்து தனது யூ டியூப் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் டிடிஎப் வாசன், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்ற பகுதியில் டிடிஎப் வாசன் சென்ற போது அவர் தன்னுடைய இரு சக்கரவாகனத்தை வீலிங் செய்ய முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓர பள்ளத்தில் குட்டிக்கரணம் அடித்து உடைந்து நொறுங்கியது. இதில் அவரது வலது கை எலும்பு உடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் காட்சிகளை கண்ட பலர், டிடிஎப் வாசனை கைது செய்ய வேண்டும் என்றும், லட்சக்கணக்கான இளைஞர்களின் மோசமான முன்மாதிரியாக இருக்கும் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் தாமல் பகுதியை சேர்ந்த பால வேந்தன் என்பவர் கடந்த 18ஆம் தேதி பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,

கடந்த 17ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு பைபாஸ் பாலம் அருகே ஒரு மேட் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக கவனம் குறைவாக ஓட்டி வந்து ,பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மனித உயிருக்கு மரண விளைவிக்கும் வகையிலும், மோட்டார் சக்கரத்தில் முன் சக்கரத்தில் தூக்கி ஓட்டிக்கொண்டு சாகசம் செய்து பயங்கரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட விபத்தை நேரில் பார்த்தேன்.

கீழே விழுந்து இருந்த நபரை எழுப்பி விசாரித்த பொழுது தான் டிடிஎஃப் வாசன் என கூறினார். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது TF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில்,

ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன், வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் இருந்த இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் டிடிஎஃப் வாசனை போலீசார் கைது போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பு பலமுறை காவல்த்துறை எச்சரித்தும், பொதுமக்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை டிடிஎஃப் வாசனுக்கு விடுத்து இருந்த நிலையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள விபத்தின் மூலம் சட்டத்தின் பிடியில் மிக பெரிய சிக்கலில் சிக்கியுள்ள டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இனி வர இருசக்கர வாகனத்தை வைத்து குட்டி கரணம் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காவல்துறை தரப்பிலும், அரசு தரப்பிலும் மிக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தற்பொழுது டிடிஎஃப் வாசன் மீது பதியப்பட்டுள்ள வழக்குக்கு அவருக்கு ஜாமின் கிடைப்பதே மிக பெரிய சிரமம் என்றும், மேலும் தொடர்ந்து போக்குவரத்து விதியை மீறி தொடர்ந்து கவல்த்துறைக்கு தலைவலியாக டிடிஎஃப் வாசன் இருந்து வந்த நிலையில் தற்பொழுது காவல் துறையின் பிடியில் சிக்கியுள்ள டிடிஎஃப் வாசனுக்கு தக்க பாடம் புகட்ட மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தரப்பில் இருந்து சட்டத்தின் படி என்னென்ன நடவடிக்கை எடுக்க வழிமுறை இருக்கோ அதை அனைத்தையும் காவல் துறை தரப்பில் இருந்து செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.