விஜய் நடிக்கும் கோர்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அனைவரும் கொண்டாட கூடிய கமர்சியல் படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கமர்சியல் கலந்த ஆக்சன் படமாகவே எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவின் மங்காத்தா மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதே போன்ற ஒரு கமர்சியல் கலந்த ஆக்சன் படமாக கோட் திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
90 காலகட்டத்தில் மிகப்பெரிய முன்னணி நடிகர்களாக இருந்த பிரபுதேவா, பிரசாந்த், மோகன் போன்ற நடிகர்களுக்கு இந்த படத்தில் ஏதோ வந்துட்டு போவது போன்ற காட்சிகள் இல்லாமல், இவர்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில், மேலும் பேசப்படும் வகையில் வடிவமைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இந்த படத்தில் உள்ள கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் மட்டுமே இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் நிச்சயம் கோட் திரைப்படம் விஜய் ரசிகருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்குமே மிகப் பெரிய ஒரு விருந்தாக இருக்க இருக்கிறது. கோட் திரைப்படத்தின் டபுள் ஆக்சன் நடிக்கும் 2 விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோரின் வில்லன கதாபாத்திரம் வேற லெவல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகை திரிஷா இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார், ஆனால் அவர் ஜெயிலர் படத்தில் தமன்னா எப்படி காவலா பாட்டுக்கு வந்து ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றாரோ.? அதே மாதிரி ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு செல்கிறாரா.? அல்லது ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட குழுவினர் ரகசியமாகவே வைத்துள்ளார்கள். இருந்தும் திரிஷா கோட் படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் தாண்டி மறைந்த விஜயகாந்த் அவர்கள் ஏ1 டெக்னாலஜி மூலம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார் அவருடைய காட்சியை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் திரைக்கு வருவதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நிச்சயம் சினிமா ரசிகர்களை வெங்கட் பிரபு ஏமாற்ற மாட்டார் என்கின்ற தகவலும் வெளியாகிறது.
அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால், கோட் திரைப்படம் அரசியல் சார்ந்த படமும் கிடையாது, குறிப்பாக இந்த படத்தில் யாரையும் சீண்டும் வகையில் காட்சிகள் கூட இடம்பெறவில்லை என்றே கூறப்படுகிறது. காரணம். கோட் திரைப்படத்தில் சர்ச்சை கூறிய வகையில் அரசியல் வசனம் இடம் பெற்று இருந்தால், அது படம் வெளியாவதில் சிக்கல் வரும் என விஜய் தவிர்த்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் பல இடங்களில் அரசியல் பன்ச் இருக்கும், அதில் குறிப்பாக உனக்கு பின்னால் உன் மகன், அவனுக்கு பின்னால் அவன் மகன் என யாரையோ மறைமுகமாக சீண்டும் வகையில் வசனம் இருந்தது, ஆனால், இது போன்ற வசனங்கள் கோட் படத்தில் வேண்டாம் ஏன் வெங்கட் பிரபுவிடம் விஜய் கேட்ட கொண்டதாகவும் அதனால் அரசியல் பஞ்ச் சை வெங்கட் பிரபு தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விஜய் மது அருந்துவது போன்று, சிகரெட் அடிப்பது போன்ற காட்சிகள் கோட் படத்தில் இடம் பெற்றுள்ளதால், நிச்சயம் சமூக ஆர்வளர்கள் விஜய்க்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக அரசியலுக்கு வரும் விஜய் மது குடிப்பது, சிகரெட் அடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்க வேண்டும்,