ச்சீ…..ரஜினிகாந்த் இவ்வளவு கேவலமானவரா.? தனது சுய லாபத்துக்காக SPB யை என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, எனது அரசியல் ஆன்மீக அரசியல், 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிளில் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடுவோம், இப்ப இல்லை என்றால், எப்போது இல்லை, மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் என “சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி” என்பது போல் நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம், இப்போது வராவிட்டால் எனக்கு மன்னிப்பே இல்லை என தனது ரசிகர்களை உசுப்பேத்தி விட்டார் ரஜினிகாந்த்.

அரசியல் அறிவிப்பு வெளியிட்டு சுமார் மூன்று வருடங்களில் அவர் நடித்த படங்கள் தான் வரிசையாக வந்ததே தவிர, அவர் அரசியலுக்கு வரவில்லை. இறுதியில் கொரோனவை காரணம் சொல்லி தனது அரசியல் வருகைக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, மூன்று வருசமாக தலைவர் அரசியலுக்கு வருவார் என சில்லறையை சிதற விட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்தார் ரஜினிகாந்த்.

ஆனால் தனது அரசியல் வருகைக்கு கொரோனவை காரணம் சொன்ன ரஜினிகாந்த், அதே கொரோனா காலகட்டத்தில் அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மறைந்த பிரபல பின்னணி பாடகர் SPB பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, இதில் சினிமா பிரபலங்கள் பலர் SPB உடன் இருந்த தங்கள் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து நினைவு அஞ்சலியை அனுசரித்தனர்.

ஆனால் அப்போதெல்லாம் SPB அவர்கள் பற்றி ஒரு வார்த்தை பேசாத ரஜினிகாந்த், தற்போது தனது படத்தின் விளம்பர யுக்திக்கு SPB அவர்களை பயன்படுத்துவதாக சினிமா ரசிகர்கள் ரஜினிகாந்தை வெளுத்து வாங்கி வருகின்றனர், ரஜினிகாந்த் எப்போது தான் அரசியலுக்கு வரவில்லை என தமிழக மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றினாரோ, அப்போதிருந்து அவருடைய அடுத்த படம் குறித்த பரபரப்பு குறைந்து விட்டது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்தே படத்தின் பட பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில் SPB பாடிய அண்ணாத்தே படத்தின் பாடல் ஓன்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது, இதை விளம்பரம் செய்யும் நோக்கில், ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது,

இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.என பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த், இதற்கு ரசிகர் ஒருவர் உங்களை மாதிரி ஒரு ஏமாத்துகார மனிதரை வாழ்நாள்ல பாக்க முடியாது..இதுவரைக்கும் மக்கள் பிரச்சனைய பத்தி ஒரு ட்வீட் போடல, SPB நினைவு நாள் வந்துச்சு அப்பயும் போடல.. கேவலம் படம் ப்ரோமஷன்’க்கு SPB சாக்கா வச்சு ட்வீட் பதிவு என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அந்த ரசிகர்.