நடிகர் எஸ்.வி சேகர் பரப்பரப்பு …ஜெயலலிதா இறந்து எட்டு மாதம் கழித்து அவருடன் பேசினேன்…

0
Follow on Google News

நடிகர் எஸ்.வி.சேகரை அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட அழைத்தவர் ஜெயலலிதா, 2006 சட்டசபை தேர்தலின் போது, அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, நடிகர் நெப்போலியனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் நடிகர் எஸ்.வி. சேகர். தனக்கு அதிமுகவில் உரிய மரியாதை இல்லை என அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தி இருந்து வந்த எஸ்.வி. சேகர் திமுகவினருடன் நெருக்கம் காட்டி வந்தார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திப்பது, துணை முதலைவராக இருந்த முக ஸ்டாலின் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் பங்கேற்பது என்று ஜெயலலிதாவை வெறுப்பேற்றி வந்தார் எஸ்.வி. சேகர். மேலும் சட்டசபை கூட்டத் தொடரில் கிட்டத்தட்ட திமுக எம்எல்ஏ போலவே செயல்பட்ட, ஒரு கட்டத்தில் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டர் எஸ்.வி. சேகர்.

இதன் பின்பு திமுக உடன் நெருக்கமாக இருந்து வந்த எஸ்.வி. சேகர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவர் சார்ந்த பாஜக கட்சியை பல நேரங்களில் சிக்கலில் சிக்க வைத்து விடுவார். கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கூறிய வகையில் டிவீட்டரில் எஸ்.வி. சேகர்.பதிவு செய்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக பெரும் போராட்டமே வெடித்தது.

இதனால் எஸ்.வி. சேகர்.வீடு கல் வீச்சு தாக்குதலுக்கும் உள்ளானது, மேலும் எஸ்.வி. சேகர்.பாஜகவை சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரத்தில் பாஜகவும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகி செய்தியும் வெளியானது.

இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றவர் நடிகர் எஸ்.வி. சேகர்., இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதா குறித்து அவரை பகைத்து கொண்டு எஸ்.வி. சேகர். அரசியல் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி. சேகர், நான் ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளவே இல்லை, ஜெயலலிதா இறந்த பொழுது அவர்களின் ஆத்மாவுடன் நான் பேசும் பொழுது,

அப்போது அவர்கள் சொன்ன வார்த்தை, மிஸ்டர் சேகர் உங்களுக்கு ஏற்பட்ட எந்த தொல்லைக்கும் நான் காரணமில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என சொன்னார். ஒருவர் இறந்த பின்பு அவர்களின் ஆத்மாவுடன் பேசும் ஒரு அறிவியல் உண்டு, அந்த வகையில் நான் ஆத்மாவுடன் பேசினேன், அதே போன்று மறைந்த சோவுடன் பேசுகிறேன். நான் ஜெயலலிதா ஆன்மா உடன் பேசுகையில், அப்போது ஜெயலலிதா சொன்னார்கள் உங்களுக்கு ஏற்பட்ட சில மன சங்கடங்களுக்கு உள்ளானவர்களை நான் தண்டிப்பேன் என கூறியதாக தெரிவித்தார் எஸ்.வி. சேகர்..

அப்போது எப்படி ஆன்மா உடன் பேச முடியும் என் நெறியாளர் கேள்வி எழுப்ப அதற்கு, எஸ்.வி. சேகர். கூறுகையில், ஜெயலலிதா இறந்த பின்பு எட்டு மாதம் கழித்து தான் அவருடைய ஆன்மா உடன் பேச முடிந்தது. முதலில் ஆறு மாதம் பேச முடியவில்லை, ஏனென்றால் அந்த ஆத்மா சாந்தி அடையவில்லை. இறந்து போன ஒருவர் அவர்கள் முதலில் நம்ப வேண்டும், நாம் இறந்து விட்டோம் என்று நம்ப வேண்டும்.

மேலும் நம்மளுடைய உடலை விட்டு வெளியே வந்து விட்டோம் என்று நம்ப வேண்டும் அதுவரை அந்த ஆத்மா பதட்டத்துடன் இருக்கும், மீண்டும் அந்த உடலுக்குள் செல்வதற்கு முயற்சி செய்யும் என ஜெயலலிதா ஆன்மா உடன் பேசிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு பகீர் கிளப்பினார் நடிகர் எஸ்.வி. சேகர்…இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.