நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படத்தில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, வன்னிய சமூகத்தினர் சூர்யாவின் படத்தை புறக்கணித்ததால் தான் திரையரங்குகளில் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது என கூறப்பட்டது.
ஆனால் வன்னிய சமூகத்தினர் பெருபான்மையாக இல்லாத தென் மாவட்டம், சென்னை மற்றும் இதர பகுதிகளில் யாருடைய எதிப்பும் இல்லாமல் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்குவதற்கான காரணம் அறிந்து அந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜன் வருத்தத்தில் புலம்பி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் படங்களை இயக்கி பாராட்டு தக்க இயக்குனராக வலம் வருகின்றவர் இயக்குனர் பாண்டியராஜன்.
அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் கதையை தயார் செய்து சூர்யாவுக்கு பிடித்து போக படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஆனால் இந்த கதையில் பொள்ளாச்சி சம்பவத்தை உள்ளே திணித்து கதையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சூர்யா வலியுறுத்தியதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பு கதையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜன்.
படத்தின் கதையில் மாற்றங்களை கொண்டுவந்ததின் காரணமாக, முழு படமும் சன்டை கட்சியை தவிர்த்து கொத்து புரோட்டா போட்ட மாதிரி திரைக்கதை அமைத்தது. மேலும் படத்தின் முதல் பாதி படு மொக்கையாக இருந்து படம் பார்பபவர்களை வெறுப்படைய செய்தது, இரண்டாவது பாதியும் சொல்லுபடியாக இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தை கதையில் நுழைத்தால் சர்ச்சையாக வெடிக்கும் அதனால் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும்.
மேலும் படத்தின் வில்லன், மத்திய அமைச்சர் மகன் என சூர்யா வலியுறுத்தலின் பேரில் தான் இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை வைத்ததாகவும், இதனால் பாஜக தரப்பில் இருந்து எதிப்பு வரும், இதனால் படத்துக்கு மேலும் விளம்பரம் கிடைக்கும் என நடிகர் சூர்யா தப்பு கணக்கு போட்டுவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் சூர்யா நினைத்தது போன்று எந்த ஒரு சர்ச்சையும் வெடிக்கவில்லை, இதனால் சூர்யாவின் வியூகம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் மண்ணை கவ்வியுள்ளதால், வருத்தத்தில் இருக்கும் இயக்குனர் பாண்டியராஜன், என்னுடைய ஒரிஜினல் கதையை அப்படியே எடுத்திருந்தால் படம் வெளியான அன்று குறைந்த மக்கள் கூட்டம் வந்திருந்தாலும் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தடுத்த நாட்கள் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கும். ஆனால் கதையில் சூர்யா செய்த குளறுபடி அதற்கும் வழியில்லாமல் போனது என்றும்.
மேலும் இதனால் தனக்கு சினிமாவில் மிக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என இயக்குனர் தனக்கு நெருக்கமானவர்களிடன் புலம்பி தவித்து வருவதாக கூறப்டுகிறது. கதையில் மாற்றம் கொன்டு வந்தது சூர்யாவின் முட்டாள் தனம் தான் காரணம் என்றாலும் கூட இயக்குனர் பாண்டியராஜனுக்கு எங்கே போனது புத்தி என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.