ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் காலண்டர் இடப்பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து. அந்த படத்தின் இயக்குனர் இது குறித்து வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில். பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளபடும் என நான் அறியவில்லை. சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக்ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை.
படம் வெளிவந்ததும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என அந்த சர்ச்சைக்குரிய காலண்டர் படத்தில் இடம்பெற்றது இயக்குனருக்கு தெரியாது போன்று பொய் சொல்லி தற்போது கையும் களவுமாக மாட்டியுள்ளார். இது குறித்து ஜெய்பீம் படத்தை தீவிர ஆய்வு செய்து சில அதரங்களை சுட்டி காட்டி நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குனரின் முகத்திரை கிழித்துள்ளார் அந்த சினிமாவை ஆய்வு செய்த ஆய்வாளர்.
அவர் வெளியிட்டுள்ளா ஆய்வறிக்கையில், இதுல காலண்டர் வச்சதே எனக்கு தெரியாதுனு என மழுப்பிருக்கார் இயக்குனர், ஆனால் படத்தில் இவர் எத்தனை காலண்டர் புள்ளி விவரத்துடன் வைத்துள்ளார் என்று பார்ப்போம். முதல் சூர்யா அறிமுக கட்சியில், திருவள்ளுவர் காலண்டர் தேதி 09.04.1995 சூர்யா நடத்தும் முதல் வழக்கின் போது நீதிபதி மேஜையில் ஏப்ரல் மதத்தை குறிக்கும் காலண்டர்இடம்பெற்றுள்ளது.
அடுத்து பாடல் காட்சியில் வரும் சூர்யா வீட்டில் இடம்பெற்றுள்ள சித்ரா காலண்டரில், தேதி ஏப்ரல் 17 என குறிப்பிட்டு நிறைய வருடம் சரியாக தெரியக்கூடாது என்று CGல Blur பண்ணியிருக்கிறார்கள் .இதில் ஒரு வேலை தவறான வருடம் வைத்து ஷூட் பண்ணியிருக்கலாம் அதை மறைக்க இயக்குனரின் உத்தரவில் CGயில் Blur செஞ்சுருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, செங்கேனி வழக்கு தொடுக்க முயற்சிகையில், ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளா விவேகானந்தர் காலண்டர் தேதி 7.5.1995 குறிப்பிட்டுள்ளது, சூர்யா அந்த வழக்கை எடுக்க முடிவு செய்த போது தேதி 11.5.1995 என குறிப்பிட்டுள்ளது. உயர்நிதிமன்ற நீதிபதி கான்ஸ்டைன்ட் தலைமையில் சம்மன் வழங்கப்பட்ட போது 16.5.1995 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக ராஜாக்கண்ணுவை தேடி சூர்யா கேரளா செல்லும் போது அங்கு இருக்கும் காலண்டர் தெளிவாக ஜூலை மாதம் 1995 என குறிப்பிடப்பட்டுள்ளது, இப்பவே உங்களுக்கு Set Propertiesல காலண்டர் எவ்வளோ முக்கியம்னு புரிஞ்சு இருக்கும்.. கதையின் ரியாலிட்டிக்கு அது ரொம்ப முக்கியம்.. இறுதியாக ராஜாகண்ணு கைது செய்யப்படும் தேதி, 04.04.1995 என்றும். அந்த காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் இருக்கும் காலண்டர் தேதி 06.04.1995 என குறிப்பிட்டு, காவல் உதவி ஆய்வாளர் 2 நாள் வைத்து அடிப்பது போன்று படத்தில் காட்டியிருப்பார்கள்.
இதில் வன்னியர்கள் குறியீடு தெரியாமல் வந்தது என்றால், அது எப்படி உங்களுக்கு தெரியாமலே தேதியெல்லாம் சரியாக வருகிறது. உண்மையில் நீதிபதியாக இருந்து தீர்ப்பு கொடுத்தவரை ஹிந்து பெயரிலிருந்து கிறிஸ்டியன் பெயரா மாற்றி விட்டு , அதே நேரத்தில் கொலை செய்த கிறிஸ்டியன் நபரை ஹிந்து பெயராக மாற்றி விடுவதெல்லாம் என்ன மாதிரியான வன்மம் என படத்தை ஆய்வு செய்த உமாபதி சிவா தெரிவித்துள்ளார்.