சூர்யா செய்யும் தில்லாலங்கடி… இந்த வெட்டி பில்டப் தேவை தானா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவார் திரைப்படம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே விற்பனை செய்து விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பு தரப்பு ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி வருகிறது. இது அஜித் , விஜய் படங்களுக்கு மேல் சூர்யா படம் அதிக வியாபாரம் என்கின்ற ஒரு பில்டப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. கங்குவா படத்தை நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

அந்த வகையில் இந்த படத்தின் மூலம் சூர்யாவை ஓவர் பில்டப் செய்யும் வேளையில் அவரது உறவினரான தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது பின்னணியில் சூர்யாவின் திட்டம் என்ன என்பது பற்றி விசாரித்ததில். இன்று தமிழ் சினிமா டாப் நடிகராக இருக்கும் விஜய், அஜித்க்கு இணையான நடிகராக தன்னை அவரே நினைத்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா.

ஆனால் சூர்யா நடிப்பில் கடந்த பத்து வருடங்களில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எது என்று பைனாகுலர் வைத்து தேடினாலும் தென்படாத நிலை தான் உள்ளது, சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம், சூரரை போற்று படங்கள் OTT தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது, அதன் பின்பு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி மண்ணை கவ்விய படம் எதற்கும் துணிந்தவன்.

அந்த வகையில் ஜெய்பீம், சூரரை போற்று போன்ற படங்கள் கூட திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் வெற்றி பெற்று இருக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு, இந்நிலையில் டாப் நடிகர்கள் வரிசையில் நடிகர், விஜய் மற்றும் அஜித் இருக்கும் உயரத்திற்கு சூர்யா இருக்கும் இடத்திற்கும் ஏணி வைத்து எட்டினாலும் எட்டாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக பல நடிகர்கள் சூர்யாவுக்கு முன்னால் வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

ஆனால் விஜய் அஜித்துடன் தன்னை ஒப்பிட்டு நானும் விஜய் அஜித் இருவருக்கு சமமான நடிகர் தான் என்கிற நினைப்பில் இருக்கும் சூர்யாவின் ஆசையை நிறைவேற்று வகையில், சூர்யாவின் உறைவினரான கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஓவர் பில்டப் கொடுத்து கங்குவார் படத்தின் மூலம் சூர்யாவை அஜித் விஜய்க்கு இணையான ஒரு நடிகர் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வேலையை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் செய்து கொண்டிருக்கிறார்

அந்த வகையில் கங்குவா படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் விஜய் நடிக்கும் லியோ, அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை விட கங்குவா மிகப்பெரிய அளவு வியாபாரம் ஆகியுள்ளது என்கின்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதர்க்கான வேலை தான் கங்குவா படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம் என்கிற பில்டப் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

பொதுவாக சாட்டிலைட் டிஜிட்டல் ரைட்ஸ் விலைக்கு வாங்கும் கார்பரேட் நிறுவனங்கள் கருப்பு பணத்தில் பிசினஸ் பண்ண மாட்டார்கள், வெள்ளைப்பண்ணத்தில் தான் பிசினஸ் செய்வார்கள். அந்த வகையில் 80 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் ரைட்ஸ் விற்ற அந்த டாக்குமெண்டை அதிகாரப்பூர்வமாக கங்குவார் படத்தின் பட குழுவினர் வெளியிடுவதற்கு சூர்யா ஏற்பாடு செய்தால் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் விஜய், அஜித்திற்கு இணையானவர் தான் சூர்யா என்பதை இந்த திரையுலகமும் ஒப்புக்கொள்ளும் அதை விட்டுவிட்டு ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் எந்த பயனும் இல்லை என சூர்யாவுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர் சினிமா விமர்சகர்கள்.