தலைமைறைவான சூர்யா… ஏமாற்றினால் சும்மா விடுவார்களா.?

0
Follow on Google News

கங்குவா படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து மழை பொழியவில்லை என்றாலும் பரவாயில்லை வசைமலை பொழிந்து கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள். குறிப்பாக கங்குவா படத்தை பார்த்துவிட்டு திரைப்பட விமர்சகர்கள் விமர்சனத்தை தாண்டி பொதுமக்கள், அதாவது கூலித் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர் என சாமானியர்கள் மிகப்பெரிய கோவத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் மக்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று ஒரு குப்பை படத்தை எடுத்து விட்டு அந்தப் படத்தை பாகுபலி ரேஞ்சுக்கு ஹைட் கொடுத்த நடிகர் சூர்யா அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உட்பட ஒட்டுமொத்த சிவக்குமார் குடும்பமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக எதற்காக ஒட்டுமொத்தமாக சிவக்குமார் குடும்பம் இந்த கங்குவார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், கங்குவா பட வெளிய ஆவதற்கு முன்பு சிவக்குமார் மேடையில் பேசிய பேச்சு இன்றளவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது சூர்யா சினிமா கெரியர்லையே கங்குவா தான் டாப் என்றும், இந்த கங்குவாவை முறியடிக்க மீண்டும் சூர்யாதான் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு பில்டப் கொடுத்தார் சூர்யா.

இப்படி ஒரு குப்பை படத்தை சிவகுமார் குடும்பம் கொடுத்த பில்டப்ன் விளைவு மக்களின் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. குறிப்பாக நடிகர் சிவகுமார், சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உட்பட ஒட்டுமொத்த சிவக்குமார் குடும்பமும் சினிமாவில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த படம் குறித்து ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுப்பதற்கு முன்பு நிச்சயம் இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள்.

அப்படி இவர்கள் பார்த்த படம் படு மொக்கை என்று தெரிந்து கொண்டே மக்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். நம்ம பில்டப் கொடுத்து மக்களை தியேட்டருக்கு வரவழைத்து மிகப்பெரிய வசூலை ஈட்ட வேண்டும் என்கின்ற ஒரு கீழ்த்தரமான புத்தியுடன் தான் சூர்யா உட்பட ஒட்டுமொத்த சிவக்குமார் குடும்பமும் ஒரு குப்பை படத்தை அவங்க குடும்ப உறவினர் மூலம் தயாரித்து கல்லா கட்டுவதற்காக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரவழைத்து மக்களின் கோபத்திற்கு இன்று ஆளாகி இருக்கிறார்கள்.

கங்குவா படம் முழுவதும் குப்பைதான் அதில் முதல் அரை மணி நேர காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேவலமான படம் வெளியாகவில்லை என்று சொல்லும் அளவிற்கு படு மோசமாக இருந்தது. அந்த வகையில் ஒரு படத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகரை முதல் அரை மணி நேரம் உங்களால் உட்கார வைக்க முடியவில்லை என்றால் அடுத்தடுத்து அவன் அந்தப் படத்தை எப்படி இரண்டரை மணி நேரம் உக்காந்து பார்ப்பான்.

கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு, சூர்யா உட்பட அனைவரும் பார்த்திருப்பார்கள் , பார்த்து இந்த படம் நல்லா இல்லை என்று தெரிந்து தவறுகளை சரி செய்திருக்கலாம். ஆனால் குப்பை படம் என தெரிந்து கொண்டே முழுக்க முழுக்க நம்ம ஹைப் கொடுத்து மக்களை ஏமாற்றி வசூலை அள்ளி விடலாம் என்கின்ற ஒரு தவறான நோக்கத்திற்காக இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து மக்களை ஏமாற்றிய சூர்யா,

மற்றும் அவருடைய குடும்பத்தினர் பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுந்து நிலையில் தற்போது சூர்யா மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் இவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு ஓடி ஒளிந்து விட்டார்கள் ஆனால், படம் பார்த்து காது போச்சு, தலைவலியில் அவதி படுகிறோம், எங்களை ஏமாற்றிய சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here