பச்சோந்தி தன் நிறத்தை சூழ்நிலைக்கேற்ப மாற்றுவது போல் நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா சூழ்நிலைக்கேற்ப பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வின் காரணமா மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது ஒரு மாதிரியா பொங்கி எழுந்த நடிகர் சூர்யா, திமுக ஆட்சியில் தற்போது மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது குறித்து வேறு விதமாக பேசி அதிமுக ஆட்சியில் பொங்குவதும், திமுக ஆட்சியில் அடக்கி வாசிப்பதும் என சுழற்கேற்ப மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருகிறார் நடிகர் சூர்யா.
கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வின் போது நடிகர் சூர்யா தெரிவித்ததாவது, சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக் கதை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்? என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் சூர்யா கூறியதாவது, இதுக்கு மேலயும் இந்த தேர்வு முறையை நடத்தப்பட்டால், நேற்று நடந்தது தான் இன்று நடக்கிறது, இன்று நடக்கிறது தான் நாளையும் நடக்கும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தீயிட்டு பொசுக்கிய இந்த நீட் தேர்வு முறையால், அப்பாவி மாணவர்களின் உயிரை குடிக்கும் மனிதநேயமற்ற செயலை வேடிக்கை பார்க்காமல் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து தட்டி கேட்க வேண்டும் என மாணவர்கள் தற்கொலையை நியாயப்படுத்தி, மத்திய மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார் நடிகர் சூர்யா.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என மாணவர்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால், இந்த வருடம் திமுக ஆட்சியில் நடந்த நீட் தேர்வின் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நீட் தேர்வு ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்த திமுகவை கேள்வி கேட்க வேண்டிய நடிகர் சூர்யா, ‘மதிப்பெண் தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல என்றும் நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம் என்றும், பெரிதாக ஜெயிக்கலாம் என்றும், மாணவர் மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஒரு தேர்வு உங்களது உயிரை விட பெரியது அல்ல என்றும்,
மேலும் எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும் என்றும், அதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என சூர்யா மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவறு என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, அந்த தற்கொலையை நியப்படுத்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக மாணவர்களின் தற்கொலையில் அரசியல் செய்த சூர்யா தற்போது வேறு விதமாக பேசியுள்ளது சூழ்நிலைக்கேற்ப பச்சோந்தி போல் சூர்யா மாறுவதாகவும், எதுக்கு சார் இந்த மானங்கெட்ட பொழப்பு.? என பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.