முடிந்தது சூர்யா சோலி… சிவகார்த்திகேயனை வைத்து சாதித்த திரையரங்கு வட்டாரம்..

0
Follow on Google News

உனக்கு நேரம் வரும் பொழுது நீ ஓவர் ஆட்டம் போட்டால், அதே நேரம் உன்னால் பாதிக்கப்பட்டவருக்கு வரும்பொழுது உன்னை வெச்சு செய்து விடுவார்கள் என்பது சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் சூர்யாவுக்கு விழுந்த பலத்த அடி உணர்த்தி இருக்கிறது. பொதுவாகவே சூர்யா குடும்பத்தினருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஒரு சமூக முடிவு உறவு இருந்ததில்லை.

இதற்கு முக்கிய காரணம் சூர்யா குடும்பத்தினர் தமிழ் சினிமாவில் ஒரு மாபியா கும்பல் போன்று செயல்பட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தான். தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தையும் தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தது சூர்யா குடும்பத்தினர்.

இப்படி ஒரு மாபியா கும்பல் போன்று தமிழ் சினிமாவில் தங்கள் குடும்பத்தை எதிர்த்து கேள்வி கேட்க கூட யாரும் இல்லை என்கின்ற ஒரு நிலையை உருவாக்கியது சிவகுமார் குடும்பத்தினர். அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் முழுவதும் மூடி கிடந்த நிலையில், சின்ன நடிகர்கள் படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருந்த காலகட்டத்தில் பெரிய நடிகர்கள் படத்தை ஓ டி டி இல் வெளியிட்டால் திரையரங்குகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த வகையில் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு உங்கள் படத்தை காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுங்கள் என்ற ஒரு கோரிக்கையை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் வைத்திருந்தனர்.

ஆனால் சூர்யா நடித்த சூரரை போற்று படம் தன்னுடைய தயாரிப்பில் நான் காசு போட்ட படம். என்னுடைய படத்தை OTT யில் வெளியிடுவேன், இதை கேட்க நீங்க யார் என்கின்ற ஒரு தோரணையில் சூர்யா ஓடிடியில் சூழரைப் போற்றும் படத்தை வெளியிட முயன்ற போது பல திரையரங்கு உரிமையாளர்கள் இது போன்று உங்களை பின்பற்றி அனைத்து நடிகர்களும் ஓடிடியில் படத்தை வெளியிட்டால் திரையரங்கு நிலைமையில் யோசித்துப் பாருங்கள் என்றும் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் சூர்யா கண்டுகொள்ளவே இல்லை அது மட்டுமா திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் முயன்ற போதெல்லாம், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள ப்ரொடக்ஷன் டிமை அனுப்பி பேசவைத்து, அவர் நேரடியாக பேசுவதை தவிர்த்தே வந்தார் சூர்யா.

அதேபோன்று ஜெய்பீம் படத்தையும் ஊரடங்கு காலத்தில் OTT யில் வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்களின் கோபத்திற்கு ஆளானார் சூர்யா. இப்படி தொடர்ந்து சினிமா துறையும் தன் கட்டுப்பாட்டில் இருக்கு, நான் சொந்த காசை போட்டு படம் எடுக்கிறேன் எங்கே திரையிட்டால் உங்களுக்கு என்ன.? என்கின்ற தோரணையில் மிதப்பிலிருந்த சூர்யாவிற்கு தற்பொழுது சிவகார்த்திகேயன் மூலம் மிகப்பெரிய ஆப்பை சொருகி உள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

அதாவது ஒரு படம் ரிலீஸ் ஆனால் முதல் வாரம் 80% சதவீதம் தயாரிப்பு தரப்புக்கும் 20% திரையரங்கு உரிமையாளருக்கும் செல்லும், அடுத்த வாரம் 70/ 30 அதற்கு அடுத்து 60 / 40 அதற்கு அப்புறம் 50 / 50 என்கின்ற முறையில் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்த படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம், இந்த நிலையில் சுமார் 20 நாட்களைக் கடந்து அமரன் படம் ஓடிக் கொண்டிருக்கையில், தற்பொழுது அமரன் படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக ஷேர் கிடைக்கும்.

அதே நேரத்தில் கங்குவா படத்தை வெளியிட்டால் திரையரங்குகளுக்கு கம்மியான லாபமே கிடைக்கும், இந்த நிலையில் கங்குவா வெளியாகி முதல் நாள் படம் குப்பை என்று தெரிந்த உடனே அடுத்த நாட்கள் கங்குவா படத்தை தூக்கி விட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை போட்டார்கள், இது குறித்து கங்குவா தயாரிப்பு தரப்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசிய போது, அவர்கள் ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்கள்.

எங்கள் திரையரங்கு எங்களுக்கு எது லாபம் இருக்கு அந்த படத்தை தான் நாங்க முக்கியத்துவம் கொடுப்போம், நீங்க அன்று ஓடிடி யில் உங்க படத்தை சொல்ல சொல்ல கேட்காமல் ரிலீஸ் செய்தீர்கள், அது மாதிரி தான் இது என்று தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.