இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட படம் வணங்கான். சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பாதியிலேயே நின்ற வனங்கான் திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், மீண்டும் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
ஆனால் திடீரென வணங்கான் படத்தை கைவிடுவதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பிடி படப்பணிகள் தொடரும் என தெரிவித்த பாலா, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தரும சங்கடம் கூட சூர்யாவுக்கு நேர்ந்து விட கூடாது என்பது என் கடமையாக இருக்கிறது.
அதனால் வனங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம் என்று பாலா தெரிவித்திருந்தார். பாலாவின் இந்த அறிக்கையின் பின்னணியில் பல குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், சூரியா – பாலா இருவருக்கும் இடையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
நந்தா படத்தில் சூர்யாவை எப்படி கையாண்டாரோ அதேபோன்றுதான் வணங்கான் படத்திலும் கையாண்டு உள்ளார் பாலா. ஆனால் சூர்யா நந்தா படத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்கு உயரத்துக்கு சென்றுள்ளதால் பாலாவின் நடவடிக்கை மீது சூர்யாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்த வந்துள்ளது.
பாலா மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூர்யா, பல நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை மிக கடுமையாக வும், அநாகரீகமாகவும் திட்டி தீர்த்து உள்ளார் சூர்யா. இது பாலாவை ஜாடை மாடையாக சூர்யா திட்டுவது படப் படிப்பில் இருந்த அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். மேலும் உதவி இயக்குனரை சூர்யா திட்டுவதை பலமுறை கவனித்த பாலா அதைக் கண்டும் காணாமலும் சென்றுள்ளார்.
ஆனால் பாலா நம்மைத்தான் ஜாடை மாலையாக சூர்யா திட்டுகிறார் என்று நன்கு அறிந்துள்ளார். இப்படி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் உச்சகட்டத்தை அடைந்ததும் படப்பிடிப்பு பாதியிலேயே வெளியேறினார் சூர்யா. இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. மீண்டும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என சூர்யா கேட்டுக்கொண்டதன் பேரில் பாலாவால் படத்தின் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியவில்லை.
இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினால் இருவருக்கும் மோதல் அதிகரிக்கும் என்பதால், இந்த படத்தை கைவிடுவது என சூர்யா முடிவெடுத்துள்ளார். ஆனால் சூர்யாவுக்கு முன்பாகவே தன்னுடைய அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படுகிறது என்று பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.