கங்குவா படம் தோல்விக்கு பின்பு படத்தை ரிவ்யூ செய்யக் கூடாது போன்ற பல விதிமுறைகளை உட்படுத்தி ஒரு அறிக்கை ஒன்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை கிடையாது, சூர்யா குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ரெண்டு தயாரிப்பாளரின் வேலைதான் என்று அம்பலப்படுத்துகிறது சினிமாவாட்டரங்கள்.
அதாவது கங்குவா படம் தோல்விக்கு அந்த படத்தின் கதை சரியில்ல, இசை சரியில்லை, சூர்யாவின் நடிப்பு சொல்ற மாதிரி இல்ல, இப்படி பல விமர்சனங்கள் இருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாமல். இந்த படத்தின் தோல்விக்கு ஊடகங்களும், சினிமா விமர்சனங்கள் தான் காரணம் என்று சூர்யாவின் விசுவாசத்தை காட்டுவதற்காக குறிப்பிட்ட இரண்டு தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை தவறாக கையாண்டு தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தின் ஆக்டிவ் தலைவராக இருக்கக்கூடிய பாரதிராஜாவின் பெயரை பயன்படுத்தி தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
குறிப்பாக ஒரு படைப்பாளி தன்னுடைய படத்தை முதல் நாள் ரிலீஸ் செய்யும் போது அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வேண்டும், அந்த படத்தை மக்கள் கொண்டாட வேண்டும், அதை வெளியில் சொல்ல வேண்டும் அதனால் அந்த படம் வெற்றியடைய வேண்டும் அதற்கு இந்த ஊடகங்கள் எல்லாம் துணையாக இருக்க வேண்டும் என்று திறமையான படைப்பாளிகள் எண்ணம் இருக்கும்.
ஆனால் மூன்று நாட்களுக்கு புதிய படங்களை விமர்சனமே செய்யக்கூடாது என்று முன்னெடுத்தால் அந்த படத்தின் படைப்பாளி, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அந்தப் படத்தின் நடிகர் இவர்களுக்கே அந்த படம் வெற்றியடையும் என்கின்ற நம்பிக்கை இல்லை என்பதால் தன இது போன்ற ஒரு முடிவை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
மேலும் கங்குவா படம் தோல்விக்கு பின்பு ஆக்டிவ் கவுன்சில் தலைவராக இருக்கக்கூடிய பாரதிராஜா கையொப்பமிட்டு படங்களை ரிவ்யூ செய்ய கூடாது என்கின்ற போன்ற பல விதிமுறைகளை விதித்து வெளியான அறிக்கை கூட பாரதிராஜாவின் ஒரிஜினல் கையெழுத்து இல்லை என்று அம்பலப்படுத்துகிறார் சினிமா துறையைச் சார்ந்த முக்கிய பத்திரிகையாளர் ஒருவர். காரணம் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் அவருடைய மகள் வீடான மலேசியாவில் இருந்து வருவதாகவும்,
குறிப்பாக பாரதிராஜா உடன் நெருங்கி பழகியவர்கள் கூட நேரில் பார்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க திணறுகிறார், அந்த அளவிற்கு அவருக்கு நினைவுகள் இல்லை என்று கூறப்படுகிறது, அப்படி இருக்கையில் பாரதிராஜா இதற்கு முன்பு போட்டு கொடுத்த கையெழுத்துகளை ஸ்கேன் செய்து அந்த டிஜிட்டல் கையெழுத்தை பல இடங்களில் பயன்படுத்தி பாரதிராஜா பெயரை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விமர்சனங்கள் வரக்கூடாது என்கின்ற அறிக்கை கூட பாரதிராஜாவுக்கு தெரியாது என்றும் பாரதிராஜா பெயரை வேண்டும் என்று இப்படி கெடுத்துக் கொண்டிருக்கிறது சூர்யாவுக்கு விசுவாசமாக இருக்க கூடிய ஒரு தரப்பு என்ற குற்றச்சாட்டை சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது காரணம் விமர்சனங்களால் அடையாளம் காணப்பட்டவர் பாரதிராஜா, விமர்சனங்களால் வெற்றியை ருசித்தவர் பாரதிராஜா. அப்படி இருக்கையில் ந புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு விமர்சனம் கூடாது என்று பாரதிராஜா சொல்ல மாட்டார் அந்த வகையில் பாரதிராஜா பெயரையே தவறாக பயன்படுத்துகிறது சூர்யாவுக்கு ஆதரவான ஒரு குருப் என்கிறது சினிமா வட்டாரங்கள். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்