இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் அமீர் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தொடங்கப்பட்ட படம் தான் வாடிவாசல். ஆனால் படம் தொடங்கி மாதங்கள் பல ஆகியும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருக்கிறது. அந்த வகையில் வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்கலாம் என்கின்ற முடிவில் இருந்தார்.
நடிகர் சூர்யாவும் வெற்றிமாறன் விரைவில் வந்துவிடுவார் என்று காத்திருந்த காத்திருந்த சூர்யா, இனி காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் கமிட் ஆகி ஓட தொடங்கிவிட்டார். இந்த நிலையில் சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கும் இந்த சூழலில் வெற்றிமாறனுடன் மீண்டும் வாடிவாசல் படத்தில் இணைவாரா என்கின்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தூசி தட்டியுள்ள நிலையில், இந்த படப்பிடிப்பு தொடர்பாக சூர்யாவிடம் ஆலோசித்துள்ளார் வெற்றிமாறன். ஆனால் சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்கினால் அந்த படப்பிடிப்பு எப்போது முடியும்.
இதனால் தன்னுடைய அடுத்த படத்தின் கால்ஷீட் பாதிக்கப்படும் என்று சூர்யா தயக்கம் காட்டி வந்திருக்கிறார் . இந்த நிலையில் சூர்யாவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் வாடிவாசலில் நடிக்க இருப்பதாக கூட பேச்சுவார்த்தை இருந்தது. ஆனால் சமீபத்தில் நடிகர் சூர்யா வீட்டில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது சூர்யா இந்த படத்தை தொடங்கினால், அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும் என கண்டிஷன்போட்டுள்ளார்.
அதற்கு வெற்றிமாறன் ஆறு மாதங்களில் தன்னால் இந்த படத்தை அவசர அவசரமாக எடுக்க முடியாது, அப்படி எடுத்து இந்த படம் நான் நினைத்த மாதிரி வரவில்லை என்றால் இந்த படத்தை எடுக்காமலே நான் இருக்கலாம், குறைந்தது எனக்கு 10 மாதம் வேண்டும், அப்போது தான் நான் நினைத்த மாதிரி இந்த படத்தை எடுத்து முடிக்க முடியும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வாடிவாசல் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு, அடுத்த 2026 ஜனவரி பொங்கலுக்கு வாடி வாசலை ரிலீஸ் செய்யலாம் என்று வெற்றிமாறன் தன்னுடைய திட்டத்தை சூர்யாவிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூர்யா தொடர்ந்து பத்து வருடங்களாக தோல்வி படத்தை கொடுத்து வருகிறார்.
மேலும் கைவசம் இருந்தால் பாலா இயக்கத்தில் வணங்கான், சுதா கங்கார இயக்கத்தில் புறநானூறு போன்ற படங்கள் எல்லாம் கையை விட்டு போய்விட்ட நிலையில், சூரியா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தாலும் சொல்லும்படியாக அந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை. அந்த வகையில் தன்னுடைய சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய படமாக வாடிவாசல் இருக்கும் என நம்புகிறார் சூர்யா.
குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் தனக்கு, இந்த படம் வெற்றியை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் பத்து மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் டிசம்பருக்குள் இந்த படத்தை முடித்து விட வேண்டும் என்று ஓகே சொன்னாராம் சூர்யா. அதனால் விரைவில் வாடிவாசல் படம் ஏப்ரல் மாதம் தொடங்கி இருக்க நிலையில், வெற்றிமாறன் டிசம்பருக்குள் முடிப்பாரா.? அல்லது விடுதலை போன்று வருட கணக்கில் சூர்யாவை வாட்டி எடுக்கப் போகிறாரா என்கிறது சினிமா வட்டாரங்கள்.