விஜய் சேதுபதி மானத்தை காற்றில் பறக்க விடும் மகன் சூர்யா சேதுபதி… இவருக்கு இப்படி ஒரு மகனா.?

0
Follow on Google News

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் அவரின் தந்தை நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார். ஆனால் தற்போது பார்த்தால் கிடுகிடுவென வளர்ந்து ஹீரோவாகவே நடித்துவிட்டார். இந்நிலையில் அவர் வளர மட்டுமில்லை, அவரது வாய்க்கொழுப்பும் அதிகரித்துவிட்டது என ரசிகர்கள் அவரை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிவிட்டனர்.

சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் என்ற, முதல் படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டரான அனல் அரசு இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை ஆரம்பித்த தினத்தில் இருந்தே சூர்யா சேதுபதிக்கும் ராகு காலம் ஆரம்பித்துள்ளது. பூஜை போட்ட முதல் நாளில் பேசிய சூர்யா சேதுபதி, நான் என்னுடைய அப்பா பெயரில் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை, நான் வேறு என் அப்பா வேறு என பேசியது என்னமோ இவர் பல வருடம் சினிமாவில் கடுமையாக போராடி இந்த வாய்ப்பை பெற்றது போன்று இருந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் சேதுபதி மகன் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, பப்ளிக் எக்ஸாம் எழுத என்னை பள்ளியில் ட்ராப் செய்ய என்னுடைய தந்தை பள்ளிக்கு வந்தார் என்றும், அப்போது தன்னிடம் என்னடா தேர்வு எழுத வேண்டுமா.? இல்ல வேற எங்கேயாவது போகலாமா.? கட் அடித்து விடுகிறாயா.? என்று தன்னுடைய தந்தை விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக தெரிவித்த விஜய் சேதுபதி மகன்.

அதற்கு அப்பா, அம்மா செருப்பால அடிப்பாங்க வேண்டாம் பா, நான் பரிச்சை எழுதிட்டு வந்துருறேன் என்று சொன்னதாகவும், அதற்கு சரி எக்ஸாம் எழுதிட்டு வா என்று தன்னை விஜய் சேதுபதி அனுப்பி வைத்ததாக சிரித்துக்கொண்டு நக்கலாக பேசிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அடுத்து தொடர்ந்து பேசியது தான் என்ன விஜய் சேதுபதி பிள்ளையை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல வைத்துள்ளது.

அதாவது தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி மகன், தன்னுடைய தந்தை இப்ப வரை ஒரு விஷயத்தை சொல்லுவார், அதாவது எஜுகேஷன் உன்னை வளர்க்காது, ஆனால் பள்ளிக்கு போவது மிகவும் அவசியம், ஏனென்றால் அங்கே இருக்கும் சக மனிதனைப் பார்த்து பழகுவதும் வளருவதும் தான் நாளைக்கு உன் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். அதாவது வேலைக்கு நீ சென்ற பின்பு அங்கே அதே மாதிரியான மனிதனை தான் பார்க்கப் போகிறோம்.

அதனால் பள்ளிக்கு சென்று சக மனிதர்களுடைய பழக ஆரம்பித்தால் இதெல்லாம் சரியாகிவிடும் அதுக்காக ஸ்கூலுக்கு போ, படிப்பதற்காக பள்ளிக்கு போக வேண்டாம் என்று தந்தை விஜய் சேதுபதி தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், மேலும் தான் படிப்பதிலும் மிகவும் கம்மியான மார்க் வாங்கியதாக சிரித்துக் கொண்டு பேசிய விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பேசியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எங்க அப்பா ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுப்பார் அந்த அளவுக்கு கஷ்ட பாட்டேன் என்றெல்லாம் விஜய் சேதுபதி மகன் பேசியது பெரும் எதிர்ப்பு கிளப்பியது.

இந்நிலையில் முக்கிய பிரமுகர் ஒருவர், விஜய் சேதுபதி மகனின் வளர்ப்பு சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும் அம்மா, அப்பா ஒழுக்கத்தை சொல்லி வளர்ந்து இருந்தால் அவர் இப்படி பேசி இருப்பாரா?. தத்துவமாக பேசும் விஜய் சேதுபதி முதலில் தனது மகனிடம் பொது இடத்தில் இப்படி பேசக்கூடாது, பணிவோடு பேச வேண்டும் என்பதை மகனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி ஆணவத்தோடு, திமிரோடு பேசிய பலர் காணாமலே போய்விட்டார்கள் என விஜய் சேதுபதி வளர்ப்பு சரியில்லை என தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here