நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா படம் பலத்த அடி வாங்கி இந்த வருடம் வெளியான படங்களிலேயே படு மோசமான படங்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து மண்ணை கவ்வி உள்ளது. இந்த நிலையில் கங்குவா படுதோல்வியால் நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரே கேள்விக்குறியாய் இருக்கும் இந்த நிலையில் நடிகர் அஜித் நடிகர் சூர்யாவிற்கு தக்க பாடம் புகட்டியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாகவே நடிகர் அஜித் ஒரு நபரை பிடித்து விட்டால் அந்த நபருக்காக அவரே இறங்கி வந்து என்ன வேண்டுமானாலும் உதவி செய்வார். அதே நேரத்தில் ஒரு நபரை பிடிக்கவில்லை என்றால் அவர் அஜித்துடன் நெருங்கி பழகி இருந்தாலும் கூட அடுத்து அவர் முகத்தில் கூட முழிக்க விரும்ப மாட்டார் அஜித். இந்த நிலையில் அஜித்துக்கு பிடித்தமான இயக்குனர்களில் எச் வினோத், சிறுத்தை சிவா போன்றவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
குறிப்பாக சிறுத்தை சிவா நடிகர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போன்று நடந்து கொள்வார், ஒரு குழந்தை மாதிரியான குணம் படைத்தவர் என்று கூறப்படுகிறது, இதனாலேயே அஜித்துக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ந்து 4 படங்கள் இயக்கியுள்ளார்.
இதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் படம் தோல்வியை தழுவியதும், சிறுத்தை சிவா சினிமா கேரியரே முடிந்து விட்டது என பலரும் தெரிவிக்க, உடனே அடுத்து விசுவாசம் படத்தில் வாய்ப்பு கொடுத்து சிறுத்தை சிவாவை தூக்கி விட்டவர் அஜித். அதே போன்று அஜித் நடித்த வலிமை படம் தோல்வியை அடைந்ததும், அடுத்து துணிவு படத்தில் எச்.வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் அஜித்.
இப்படி தனக்கு பிடித்தமான இயக்குனர்கள் சரிவை சந்திக்கும் போதெல்லாம் தூக்கி விடக் கூடியவர் அஜித். அந்த வகையில் கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி இத்துடன் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இனி சிறுத்தை சிவா இயக்கத்தில் யார் நடிப்பார்கள் என்று கேலி கிண்டல் செய்து கொண்டிருக்கையில்,நடிகர் அஜித்திடமிருந்து ஒரு தொலைபேசி சிறுத்தை சிவாவிற்கு வந்திருக்கிறது.
கவலைப்படாத ச, நான் இருக்கேன் தற்பொழுது விடா முயற்சி, குட் பேடு அட்லி இந்த இரண்டு படம் முடித்தவுடன் 2025-ல் உங்க டைரக்ஷன்ல தான் அடுத்து என்னுடைய படம். கதையை தயார் செய்யுங்க என்று அஜித் சிறுத்தை சிவா உடன் பேசியதாக தகவல் வெளியாக நிலையில், சூர்யாவுக்கு இது தக்க பாடமாக அமைந்துள்ளது. காரணம் சூர்யாவின் சினிமா கேரியருக்கு முக்கிய பங்காற்றியவர்கள் கௌதம் வாசுதேவ மேனன், ஹரி, பாலா போன்ற இயக்குனர்கள்.
அவர்களெல்லாம் சரிவை நோக்கிய போது சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டு மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்ற போது சூர்யா அவர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் தற்பொழுது சிறுத்தை சிவா வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கேட்காமலே அவரே முன் வந்து அஜித் வாய்ப்பு கொடுத்தது, தன்னை வளர்த்து விட்ட கௌதம் வாசுதேவ மேனன், ஹரி, பாலா போன்ற இயக்குனர்களை உதாசீன படுத்திய சூர்யாவுக்கு தக்க பாடம் புகட்டி உள்ளார் அஜித் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.