மும்பை போனதும் வெளியானது சூர்யா – ஜோதிகா சுயரூபம்… இவர்களுக்கா சில்லறையை சிதற விட்டாய் தமிழா.?

0
Follow on Google News

தங்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வெளிபடுத்தும் நட்சத்திர தம்பதியினர் சூர்யா – ஜோதிகா இருவரும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாம் என மேடை ஒன்றில் பேசி கடும் எதிப்புகளுக்கு உள்ளனார் நடிகை ஜோதிகா.

அதாவது சூர்யா அரசியல் சார்ந்தது எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத வரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களை அணைத்து தரப்பு மக்களுக்கு பார்த்து கொண்டாடினார்கள். ஆனால் எப்போது சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தங்களை ஒரு சமூக போராளியாக முன்னிறுத்தி கருத்து தெரிவித்து வந்தார்களோ இதன் பின்பு சூர்யா நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக கடந்த பத்து வருடங்களாக சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை, இந்நிலையில் தன்னுடைய ஒவ்வொரு படமும் வெளிவருவதற்கு மும்பு நரம்பு புடைக்க, மும்மொழி கொள்கையை எதிர்த்து அறிக்கை வெளியிடுவது, நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிடுவது என தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக மக்களிடம் தன்னை சமூக போராளியாக காட்டி கொண்ட நடிகர் சூர்யா, தமிழில் தொடர் தோல்வி காரணமாக, இந்தி சினிமாவில் நடிக்கும் முயற்சியில் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார்.

இந்நிலையில் இந்தியில் சூர்யாவுக்கு பெருசா எதிர்ப்பார்த்த படி படம் அமையவில்லை, காமிட்டான சில படங்கள் கூட கைவிட்டு நழுவி கொண்டிருக்கிறது, இந்நிலையில் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு’ என்ற திரை படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த படம் தற்பொழுது கைவிட பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சூர்யா – சுதா கொங்கரா இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்பது வெளியாகியுள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதற்க்கு சூர்யா மனைவி ஜோதிகா புறநானூறு படத்தில் கதையில் தலையிட்டு சில மாற்றங்கள் கொண்ட வர வலியுறுத்தியது தான் என கூறப்படுகிறது.

அதாவது புறநானுறு படத்தில் கதையில் ஹிந்தி எதிர்ப்பு காட்சிகள் அந்த படத்தின் முக்கியத்துவம் வைத்ததாக உள்ளது. இந்நிலையில் சூர்யா ஹிந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்த இருப்பதால் ஹிந்தி எதிப்பு குறித்த கதையில் சூர்யா நடித்தால், ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் பறிபோவது மட்டுமில்லை, மும்பையில் குடும்பத்துடன் எங்கே சென்றாலும் கடும் எதிப்புக்கு உள்ளாக நேரிடும் என உணர்ந்த ஜோதிகா.

மேலும் மும்பையை காலி செய்து விட்டு குடும்பத்துடன் மீண்டும் சென்னைக்கு தான் செல்ல வேண்டும் என்பதால் புறநானுறு படத்தில் இந்தி எதிர்ப்பு காட்சிகள் வேண்டாம் என ஜோதிகா கண்டிஷன் போட, படத்தின் முக்கியமான காட்சியே இந்தி எதிர்ப்பு தான் அதை எப்படி நீக்க முடியும் என இயக்குனர் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்பொழுது புறநானுறு படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதற்கு மும்பு தங்களை தமிழ் போராளி போன்று காட்டிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட சூர்யா தற்பொழுது இந்தி எதிர்ப்பு கதையில் நடிக்க மறுத்துள்ளது, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் முகத்திரை கிழிந்துள்ளது என பலரும் விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.