ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தை எடுத்து விட்டு, அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து மக்களிடமிருந்து பல கோடி பணத்தை பிடுங்கும் ஒரு கொள்ளை முயற்சியில் தான் கங்குவா படம் மூலம் சூர்யாவும் அவருடைய உறவினர் ஞானவேல் ராஜாவும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு உதாரணத்திற்கு ஒரு ஹோட்டல் ஒன்று மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி பில்டப் கொடுக்கிறார்கள்.
இதை நம்பி மக்கள் அந்த ஓட்டலில் சென்று சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வருகிறார்கள் மக்கள். வீட்டில் வந்து சாப்பிட்டால் சாப்பாடு கெட்டுப் போய் இருக்கு அல்லது தரமற்ற சாப்பாடாக இருக்கிறது. உடனே பணம் கொடுத்து சாப்பாடு வாங்கிய மக்கள் என்ன செய்வார்கள்.? நிச்சயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த ஹோட்டலுக்கு தண்டனையை பெற்றுக் கொடுப்பார்கள்.
அது மாதிரி தான் தற்பொழுது கங்குவா படத்தில் நிகழ்ந்துள்ளது. ஒரு குப்பை படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஓவர் பில்டப் கொடுத்து மக்களை எப்படியாவது முதல் இரண்டு நாட்கள் திரையரங்குகளுக்கு வரவழைத்து பல கோடி மக்களிடம் இருந்து வாரி சுருட்டலாம் என்று நினைத்து சூர்யாவும் அவருடைய உணவினர் ஞானவேல் ராஜாவும் போட்ட திட்டமிட்டு மிகப்பெரிய மோசடி திட்டம் என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
அந்த வகையில் எப்படி ஒரு தரமற்ற உணவுகளை வாங்கி மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு சட்டம் தண்டிக்க சட்டம் வழி இருக்கிறது, அதேபோன்று இது போன்ற ஒரு குப்பை படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஓவர் பில்டப் கொடுத்து மக்கள் ஏமாற்றி பணம் பறிக்கும் சூர்யா போன்ற சினிமா துறையைச் சார்ந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை கொண்டு வர வேண்டும் என பணம் கொடுத்து படத்தை பார்த்து தங்களுடைய நேரத்தையும் செலவு செய்து ஏமாந்த மக்கள் தங்களுடைய கோரிக்கையை அரசுக்கு வைத்து வருவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக இது போன்ற சட்டம் சினிமா துறைக்கு இல்லாததால் தான் தொடர்ந்து மக்களை இப்படி திட்டமிட்டு ஏமாத்தி வருகிறது இந்த கும்பல் என மக்கள் அதாங்க படுகிறார்கள். குறிப்பாக சினிமா பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும் கங்குவா படம், சூர்யா மற்றும் பட குழுவினர் கொடுத்த பில்டப் போன்று இந்த படம் 350 கோடி 400 கோடி பட்ஜெட் எல்லாம் கிடையாது.
படம் பெரும்பாலும் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டு VFX செய்யப்பட்ட ஒரு படம். ஆனால் இந்த படத்தை 350 கோடியில் எடுத்தோம் 400 கோடியில் எடுத்தோம் என்று பில்டப் செய்து அதை மக்கள் நம்பி ஆகா மிகப்பெரிய பட்ஜெட் படமா.? 2000 கோடி வசூல் ஆகுமா.? ஐம்பது மொழியில் ரிலீஸ் ஆகுதா.? அப்ப நிச்சயம் படம் நன்றாக தான் இருக்கும் என்று முதல் இரண்டு நாட்கள் மக்கள் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும்.
அதை வைத்து கல்லா கட்டிவிடலாம் என்கின்ற ஒரு மோசடி திட்டம் தான் இந்த கங்குவா படத்தின் மூலம் இவர்கள் போட்டு இருக்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்ற நினைத்த இந்த மோசடி கும்பலுக்கு முதல் காட்சியிலேயே விழித்துக் கொண்ட மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டது போன்று மற்ற மக்கள் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்று சமூக வலைதளம் மூலம் கங்குவா படத்திற்கு எதிராக செய்த பிரச்சாரம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க போட்ட மிகப்பெரிய மோசடி தடுக்கப்பட்டிருக்கிறது என்ற சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.