இந்திக்கு தான் முக்கியத்துவம்… அப்ப தமிழ் மொழி… கிழிந்தது சூர்யா முகத்திரை… தமிழா இப்பாவது உனக்கு புரிகிறதா.?

0
Follow on Google News

தொடர்ந்து சுமார் 10 வருடங்களாக சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியான அணைத்து படங்களும் மண்ணை தான் கவ்வியுள்ள நிலையில், தற்பொழுது, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. பாகுபலி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் வெற்றியடைந்து வசூல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், நாமும் ஒரு வரலாற்று ஃபேண்டஸி திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் பாக்ஸ் ஆபிஸை பிடிக்கலாம் என்கிற நோக்கத்துடன் சூர்யா நடித்து வருகிறார்.

மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆகி உள்ள நடிகர் சூர்யா கங்குவா படத்தை பான் இந்தியா படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட்டில் இருந்து ஹீரோயின் மற்றும் வில்லன் என களமிறக்கி உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி மற்றும் அனிமல் படத்தில் நடித்த வில்லன் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனைவி ஜோதிகாவை போல சூர்யாவும் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி வருகிறார். இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யா அடுத்ததாக கர்ணன் என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சூரரைப் போற்று படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு தந்த சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல், அபிஸியலாக அறிவிப்பு வெளியானதுடன், சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சூர்யா – சுதா கொங்கரா இணையும் படத்தின் டைட்டில் புறநானூறு என அறிவித்த படக்குழு, ஷூட்டிங்கையும் தொடங்கியது. அதன்படி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புறநானூறு ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

அதேபோல், இந்தப் படம் 1960களில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் இந்த படத்தின் பற்றிய அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனா நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் எதுவும் வெளியாக வில்லை. இதனால் படம் ட்ராப் செய்யப்பட்டதா என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒருவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பேசிய அவர், “புறநானூறு கதையை சூர்யாவிடம் சுதா கொங்கரா சொல்லியபோது அப்போதைய சூழல் வேறு மாதிரி இருந்தது. அந்த சமயத்தில் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் சூர்யாவுக்கு இல்லை. ஜோதிகாவும் சூர்யாவுடன் சென்னையில்தான் வசித்துவந்தார். ஆனால் இப்போது ஜோதிகா ஹிந்தி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மும்பை சென்றதன் விளைவுதான் புறநானூறு படத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு காரணம்.

அதாவது புறநானூறு படத்தில் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. கதையை கேட்ட ஜோதிகா தரப்பு கதையில் இருக்கும் வீரியத்தை குறையுங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதற்கு சுதா கொங்கரா தயாராக இல்லை. இன்னொரு தகவல் என்னவென்றால், சுதா கொங்கராவின் அனுமதி இல்லாமல் இன்னொரு இயக்குநரிடம் புறநானூறு ஸ்க்ரிப்ட்டை கொடுத்து படிக்க சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமான சுதா கொங்கரா சூர்யாவின் விவாதம் செய்ததாகவும் ஒரு தகவல் என சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது தற்பொழுது இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா – சூர்யா இருவரும் ஹிந்தி சினிமா கை கொடுத்தால் தமிழுக்கு குட் பை சொல்லும் முடிவில் உள்ளனர், இப்படியான சுழலில் ஹிந்தி எதிர்ப்பு குறித்த கதையில் நடித்தால் இந்தி சினிமாவில் இருந்து விரட்ட படுவோம் என்பதால் தான் சுதா கொங்கரா உடன் சூர்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.