5000 அமெரிக்க டாலர்.. ஆஸ்கர் யூடியூபில் ஜெய்பீம்..! சூர்யா கும்பலில் மாபெரும் பித்தலாட்டத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபம்..

0
Follow on Google News

ஆஸ்கர் விருதின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ படம் தொடர்பான சிறப்பு வீடியோ பகிர்வு இடம்பெற்றுள்ளது. #SceneAtTheAcademy என்ற தலைப்பில் ஆஸ்கர் அகாடமி உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தங்கள் பக்கங்களில் பதிவிட்டு உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதன்படி, இந்த #SceneAtTheAcademy-யில் தற்போது ஜெய் பீம் படத்தின் காட்சிகளும், இயக்குநரின் விவரிப்புகளும் 12 நிமிட காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் #SceneAtTheAcademy பிரிவில் தமிழ்த் திரைப்படம் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என பல்வேறு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கையில், இதன் பின்னணியில் உள்ள பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பசுமை தாயாக செயலாளர் அருள் ரத்தினம். அவர் தெரிவித்ததாவது, ஜெய்பீமுக்கு ஆஸ்கர் விருது; ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’;

சூர்யா, சந்துருவுக்கு ‘சமுதாய ஆஸ்கர்’ – இப்படி படோபடமான செய்திகள் நாள்தோரும் ஊடகங்களை கலக்குகின்றன. ஆனால், இவை எல்லாமே மாபெரும் பித்தலாட்டக் கதைகளே ஆகும். ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ படத்தை ஆஸ்கர் குழுவினரே வெளியிட்டுள்ளனர். அந்த அளவுக்கு உன்னதமான காட்சிகள் படத்தில் உள்ளன என்கிற புரூடா ஒன்று உலாவிடப்பட்டுள்ளது. இது ஒரு உலகமகா கட்டுக்கதை ஆகும்.

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ படம் தானாக பதிவேறவில்லை. 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த செய்தியை ஆஸ்கர் நிறுவனமே தெளிவாக ‘5000 அமெரிக்க டாலர் கொடுத்து’ இந்த வசதியை வாங்கிக்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. (Streaming uploads for Scene at the Academy may be purchased. Submission fee is $5,000) இவ்வாறாக பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ படத்தை வெளியிட்டுவிட்டு, ஏதோ அக்காடமி விருது குழுவினரே தேர்ந்தெடுத்து வெளியிட்டது போன்று புரூடா விடுகின்றனர்.

ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பட்டியல் என்பது, விருதுக் குழுவினர் தேர்வு செய்யும் படங்களின் பட்டியல் அல்ல. அது விருது கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அனைத்து படங்களின் பட்டியல் ஆகும்.
‘ஒரு திரைப்படம் என்பது 40 நிமிடங்களுக்கு மேலாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பிக்ஸல் மற்றும் ஒலித்தரம் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் ஆஸ்கர் குழுவுக்கான விதிகளை வைத்துள்ளனர். இந்த குறைந்தபட்ச தகுதியுடன் விண்ணப்பிக்கும் அனைத்து படங்களையும் “நினைவூட்டல் பட்டியல்” (Reminder List) என்று வெளியிடுகிறார்கள்.

இவ்வாறு 2022 ஆம் ஆண்டுக்கான 276 படங்களின் ‘நினைவூட்டல் பட்டியல்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து மரைக்காயர், ஜெய்பீம் படங்கள் இடம்பெற்றுள்ளன. (இதே போன்று கடந்த ஆண்டும் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இடம்பெறச் செய்தனர்.) இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் – ‘நினைவூட்டல் பட்டியல்’ என்பது விருது பட்டியலும் அல்ல. தேர்வு பட்டியலும் அல்ல. விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பம் பெறப்பட்ட படங்களின் பட்டியல் மட்டுமே.

இவ்வாறு, ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, ‘ஆஸ்கர் விருதுக்கு ஜெய்பீம் தேர்வு’ என்று புரூடாவை கிளப்பி விட்டுள்ளனர். (உண்மையில், இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் வெளிநாட்டு படங்கள் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட படம் கூழாங்கல் எனும் தமிழ்ப்படம் ஆகும். அது விருதுக்கு தேர்வாகவில்லை.) என பசுமை தாயக செயலாளர் அருள் ரத்தினம் தெரிவித்துள்ளது சூர்யா கும்பலின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.