தல அஜித் என்றாலே அவர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட தல அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் செலுத்தும் நாளுக்கு நாள் தான் அதிகரித்தது வருகிறது. தல அஜித்தை பற்றி சிறிய செய்தி வந்ததால் கூட அதை மிக பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். அஜித் நடித்து வெளிவர இருக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில வாரங்கள் முன்பு டிக் டக் ஜிபி முத்து, கிரிக்கெட் பிளேயர் அலி, முதல்வர் எடப்பாடி முதல் பிரதமர் மோடி வரை விட்டு வைக்கவில்லை. இவர்களிடம் வலிமை பட அப்டேட் கேட்டு மிக பெரிய அளவில் வைரலானது.
தல அஜித்தே அறிக்கை விடும் அளவிற்கு அவ்வளவு அட்டூழியம் செய்து விட்டனர். “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போலா” தல அஜித் ரசிகர்களிடம் நேற்று சூர்யா ரசிகர்கள் வாய்விட்டு பல்பு வாங்கிக் கொண்டார்கள். நேற்று நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தல ரசிகர்களுக்கு டேக் வாருக்கு அழைப்பு விடுத்தனர். ஆரம்பத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் நன்றாகத்தான் சென்றது. ஆனால் சூர்யா ரசிகர்கள் சிலர் மறைமுகமாக விமர்சித்து டேக் வார் செய்தனர்.
அப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியது. கொந்தளித்த தல ரசிகர்களின் டேக் வார் ட்வீட்கள் அரை மணி நேரத்தில் 500k வை தொட்டது. டேக் கருத்து யுத்தமாக மாறியது. தற்போது “டேக் வார்” போட்டியில் இந்திய அளவில் 2மில்லியனை கடந்து, நம்பர் 1 இடத்தைப் பிடித்த தல ரசிகர்கள். அந்த இலக்கை கூட நெருங்க முடியாமல் “வேலியில போன ஓணானை வேட்டியில் விட்ட கதை ஆகியிருச்சே” என்று புலம்பும் சூர்யா ரசிகர்கள்.நேற்று மாலை 6 மணி தொடங்கிய “டேக் வார்” இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. ஆழம் தெரியாமல் காலை விட்டால் இப்படித்தான் ஆகுமோ?