திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர், அந்த வகையில் நடிகர் ராகவலாரன்ஸ் பல ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடி வரும் குழந்தைகள் மருத்துவ செலவை ஏற்று எத்தனையோ குழந்தைகள் உயிரை காப்பாற்றி வருகிறார், தன் வாழ்க்கையை சேவை செய்யவே அர்பணித்துள்ளார் ராகவ லாரன்ஸ் என்றால் அது மிகையாகது.
இதே போன்று அகரம் அறக்கட்டளை என்கிற பெயரில் ஏழை மாணவர்களில் படிப்பு செலவை ஏற்று அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர், அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் முழு பணமும் சூர்யா குடும்பத்தினர் பணம் கிடையாது, அகரம் அறக்கட்டளைக்கு பல தொழில் அதிபர்கள் பொது மக்கள் என பலர் ஸ்பான்சர் செய்து வருகின்றனர்.
மேலும் சூர்யா தம்பி நடிகர் கார்த்திக் விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் உழவன் பவுண்டஷன் என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி சில உதவிகளை செய்து வருகிறார். ஆனால் இவர்கள் அறக்கட்டளை மூலம் செய்யும் ஒவ்வொரு உதவியும் பெருமளவில் விளம்பரம் செய்யப்பட்டு, சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சேவை பனப்பான்மை கொண்டவர்கள் என்கிற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா அல்லது அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஜோதிகா , கார்த்திக் ஆகியோர் புதிய படங்கள் எப்போதெல்லாம் வெளிவர இருக்கிறதோ அப்போதெல்லாம், தாங்கள் பெரிய சேவை மனப்பான்மை கொண்ட குடும்பத்தினர் என மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி, புதிய படத்துக்கு விளம்பரம் தேடி செல்கிறார்கள் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் விரைவில் மார்ச் 10ம் தேதி சூர்யா நடிப்பில் எதற்கும் துணித்தவன் படம் வெளியாக இருக்கையில்.
சமீபத்தில் உழவன் பவுண்டஷன் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதில் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் பங்குபெற்று தங்கள் குடும்பத்தினரை ஒருவருக்கொருவர் பாராட்டி கொண்டனர். இதற்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சிகளை பல முறை ஏற்பாடு செய்து சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீடியாவில் இந்த செய்தி முக்கிய இடம் பெரும் அளவுக்கு நடந்து கொண்டார்கள் சூர்யா குடும்பத்தினர்.
இந்நிலையில் இது போன்று தாங்கள் செய்யும் உதவிகளை மேடை போட்டு தம்பட்டம் அடிக்கும் சினிமா நடிகர்கள் மத்தியில், சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகின்றனர் நடிகை குஷ்பு – சுந்தர் சி தம்பதியினர், எத்தனையோ ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியமால் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு கல்வி கட்டணத்துக்கான பண உதவிகளை சத்தமில்லாமல் தங்கள் சொந்த பணத்தை வழங்கி வருகின்றனர்.
இது பலருக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு ஏழை தாய் வீட்டு வேலை செய்து தனது குழந்தையை காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார், அந்த குழந்தைக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், நடிகை குஷ்புவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர், உடனே ரூ.18,400.00 விதம் இரண்டு செக் மொத்தம் சுமார் ரூ 36,000.00 ரூபாய்க்கான காசோலையை குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் கையப்பமிட்டு கொடுத்துள்ளனர்.
ஆனால் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி பிரபல தயாரிப்பாளருக்கு சொந்தமானது, இந்நிலையில் தனது பள்ளியின் வங்கி கணக்கில் குஷ்பு சுந்தர் சி பெயரில் பணம் டெபாசிட் ஆனதை அறிந்த பள்ளி முதல்வர் குஷ்புவை தொடர்பு கொண்டு பேசிய போது நடந்ததை தெரிவித்துள்ளார் குஷ்பு. இதன் பின்பு தான் குஷ்பு இது போன்று பல ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக்காக உதவி செய்து வருவது பிரபல சினிமா தயாரிப்பாளரான அந்த பள்ளியின் முதல்வருக்கு தெரியவந்துள்ளது.
இது போன்று பல வருடங்களாக குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியினர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி சத்தமில்லாமல் உதவி செய்து வரும் நிலையில், உதவி செய்துவிட்டு மேடை போட்டு தம்பட்டம் அடித்து விளம்பரம் தேடும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகை குஷ்பு மாற்றும் அவரது கணவர் சுந்தர் சி ஆகியோரை பார்த்து திருந்த வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது கூறிப்பிடத்தக்கது.