ஒருவன் அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் அவன் தன்னை திருந்தி கொண்டால் மட்டுமே அடுத்து அவன் வெற்றியை நோக்கி நகர முடியும். ஆனால் நடிகர் சூர்யா கங்குவா படம் மூலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து பலத்த அடி வாங்கியும், அந்த தோல்வியிலிருந்து அவர் இன்னும் சரியான பாடத்தை கற்கவில்லை என்றுதான் தற்பொழுது அவருடைய மனைவி பேச்சைக் கேட்டு எடுத்த ஒரு முடிவு வெளிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் வெற்றி பெறவில்லை. இப்படி தொடர்ந்து நடிகர் சூர்யா அவருடைய படங்கள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் அவருடைய மனைவி ஜோதிகா தான் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் சூர்யா நடிக்கும் கதை மற்றும் அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர் இவை அனைத்துமே ஜோதிகாவின் ஆலோசனையை கேட்டு சூர்யா செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற முடிவு தான் சூர்யா தொடர் தோல்விக்கு காரணம் என்றும், அந்த வகையில் கங்குவா படம் தோல்விக்கும் கூட ஜோதிகாவின் ஆலோசனை கேட்டு சூர்யா தவறான கதையை தேர்வு செய்தது தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கங்குவா படத்திற்கு அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா கமிட்டாகி இருந்த நிலையில் அந்தப் படத்தில் சூர்யாவுக்கும் சுதா கொங்கரா இடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார்.
சூர்யா விலகியதற்கு காரணம் கூட ஜோதிகா ஆலோசனையை கேட்டு அந்த படத்தின் கதையில் சில மாற்றங்களை இயக்குனரிடம் கொண்டுவர சொன்னது தான் என்றும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சூர்யாவின் சினிமா கேரியரை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ள ஜோதிகா, கங்குவா படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் சூர்யாவின் சினிமா கேரியர் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தனக்கான தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்று உணராமல் தற்பொழுது சூர்யா தன்னுடைய மனைவியின் பேச்சை கேட்டு ஒரு முடிவை எடுத்திருக்கிறார், அதாவது மனைவி ஜோதிகாவின் விருப்பப்படி குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ள சூர்யா, தற்பொழுது மனைவியின் ஆலோசனைப்படி சல்மான் கான் உதவியாளராக இருந்த ஒருவரை தற்பொழுது தனக்கு உதவியாளராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இனி அவர்தான் சூர்யா நடிக்கும் படத்தின் கதை மற்றும் இயக்குனர் என அனைத்தையும் முடிவு செய்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழே தெரியாத ஒருவரை சூர்யா தன்னுடைய மனைவி பேச்சை கேட்டு உதவியாளரா நியமித்துள்ளது தமிழ் சினிமா பட இயக்குனர்கள் எப்படி அவரிடம் தமிழில் கதை சொல்லி புரிய வைக்க போகிறார்கள் என்கின்ற ஒரு குழப்பம் நீடித்து வருகிறது.
அதே நேரத்தில் ஜோதிகா தன்னுடைய கணவரை மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாக வைத்ததற்கு முக்கிய காரணமே தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை குறைத்து கொண்டு இந்தி சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதன்படி தான் ஒரு பேன் இந்தியா படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக வேண்டும் என்று ஜோதிகா ஆலோசனையை கேட்டு கங்குவா என்ற படத்தில் நடித்து பேன் இந்தியா ஸ்டார் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை, இருந்த இடத்தையும் தக்க வைக்க முடியாமல் அதால பள்ளத்தில் விழுந்துள்ளார் சூர்யா.
இந்த நிலையில் தன்னுடைய கணவரை பாலிவுட்டில் டாப் நடிகராக வேண்டும் என்று ஜோதிகா போடும் மாஸ்டர் பிளான் எல்லாமே இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட கதையாக, கைவசம் இருக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டையும் இழந்து விட்டார் நடிகர் சூர்யா என்கின்றது சினிமா வட்டாரங்கள். இப்படியே போனால் ஜோதிகாவே சூர்யாவின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.