விஞ்ஞானி நம்பி நாராயணன் உண்மை கதையை திரைப்படமாக எடுத்த, அந்த படத்தை மாதவன், தானே இயக்கி, தயாரித்து தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் ராக்கெட்ரி. இதே போன்று இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு – பார்வதி அம்மாள் சொந்த கதையை ஜெய்பீம் என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து, அந்த படத்தை தயாரித்து நடித்து இருந்தார் நடிகர் சூர்யா. இந்த படம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாதவன் மற்றும் சூர்யா இருவரும் ஒருவரின் உண்மை கதையை எடுத்து திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், பண விவகாரத்தில் சூர்யாவின் ஏமாற்று தந்திரங்களும், நடிகர் மாதவன் சாந்தமே இல்லாமல் நாணயமாக நடந்து கொண்ட சம்பவம் நடிகர் சூர்யாவை தலை குனிய செய்துள்ளது. 2டி நிறுவனம் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் ராஜா சூர்யா நடிப்பில் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் ஜெய்பீம்.
இந்த படம் அமேசான் OTT யில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு மிக பெரிய வசூலை அள்ளி கொடுத்தது, ஆனால் இந்த படம் வெளியான சில நாட்களில், இந்த படத்தின் கதைக்கு சொந்தமான ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் வருத்தத்துடன் தெரிவித்ததாவது, சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்தாலும் எனக்கு உதவி செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்பு நடிகர் ராகவலரன்ஸ் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய முன்வந்தார், இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்த நிலையில், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ15 லட்சம் நிதி உதவியை நேரில் உதவி வழங்கினார்.அதாவது 2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் படத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெறும் 5 லட்சம் மட்டுமே வழக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் மாதவன் நடிப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ராக்கெட்ரி, இந்த படத்தை மாதவன் தயாரித்துள்ளார், இந்த படத்தின் கதைக்காக, அந்த படத்தின் உண்மை படத்தின் கதைக்கு சொந்தக்காரர் நம்பி நாராயணனை தேடி சென்று, இது உங்களுடைய கதை, அந்த கதைக்கான உங்களுக்கு சேர வேண்டிய படம் இதோ என்று,
ரூபாய் 80 லட்சம் நம்பி நாராயணனிடம் கொடுத்துள்ளார் மாதவன். படம் வெளியாக இறுதி கட்டத்தை நெருக்கும் போது மிக பெரிய பண சிக்கலில் சிக்கிய மாதவன், தன்னுடைய சொந்த வீட்டை அடமானம் வைத்து, அந்த பணத்தில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துள்ளார். தனக்கு பண நெருக்கடி இருந்தாலும் படத்தின் கதைக்காக ரூபாய் 80 லட்சம் கொடுத்த மாதவனின் நேர்மையையை பாராட்டும் அதே வேலையில்,
ஜெய்பீம் படத்தில் பல கோடி வசூலை அள்ளி குவித்த சூர்யா அந்த படத்தின் கதைக்கு சொந்தமான பார்வதி அம்மாளுக்கு நியமாகா கிடைக்கவேண்டிய பணத்தை கொடுக்காமல் வெறும் 15 லட்சத்தில், அதில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெறும் 5 லட்சத்தை மட்டும் கொடுத்து அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றியதும் இல்லாமல் கொடுத்த 15 லட்சத்துக்கு, என்னமோ ஓசியில் தருவது போன்று விளம்பரம் தேடி கொண்ட நடிகர் சூர்யா, நாணயமாக நடந்து கொள்வது பற்றி நடிகர் மாதவனிடம் கற்று கொள்ள வேண்டும் என்கிறது சினிமா வட்டாரம்.