சுதா கொங்கராவிடம் கெஞ்சிய சூர்யா… முடியாது என விரட்டிய சுதா… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் நடந்த அந்த இந்திய எதிர்ப்பு போராட்ட கலவரம் தான் இந்த படத்தின் மையக் கரு.

அந்தப் போராட்டத்தில் மாணவர்கள் தமிழ் வாழ்க.! இந்தி ஒழிக.! என்று கோஷத்துடன் செல்வதுதான் இந்த படத்தின் ஹைலைட்டே, இப்படி இருக்கையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்பு அதில் நடிக்க கமிட் ஆனவர் நடிகர் சூர்யா. அப்போது அந்த படத்திற்கு புறநானூறு என்று பெயர் இடப்பட்டது. இந்த நிலையில் புறநானூறு படத்தில் சூர்யா கமிட்டான பின்பு அவர் பேன் இந்தியா ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்துள்ளது.

சூர்யா பேன் இந்தியா நட்சத்திரமாக வேண்டும் என்பதற்காக கங்குவார் படத்தில் கமிட் ஆகி, இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் இந்த கங்குவா வெளியான பின்பு, தான் ஒரு பான் இந்தியா ஸ்டார் ஆகி விடுவோம் என்கின்ற மிதப்பில் இருந்துள்ளார் நடிகர் சூர்யா. மேலும் கர்ணன் என்கின்ற ஒரு பேன் இந்தியா படத்திலும் கமிட் ஆகி இருந்தார் சூர்யா.

இந்த நிலையில் சூர்யாவின் கனவில் இடியாய் விழுந்தது போன்று கங்குவா, சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது, மேலும் சூர்யா கமிட்டாகி இருந்த அடுத்த கர்ணன் படம் கைவிட்டுப் போனது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பேன் இந்தியா ஸ்டார் கனவு சுக்கு நூறாக உடைந்தது. இந்த நிலையில் தான் ஒரு பேன் இந்தியா ஸ்டார் ஆக உருவெடுத்து விடுவோம்,

மேலும் அப்படி பேன் இந்தியா ஸ்டாராக உருவெடுத்த பின்பு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட சுதா கொங்காரா படத்தில் நடித்தால் ஹிந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் தமக்கு எதிர்ப்பு வரும், இதனால் தன்னுடைய அடுத்தடுத்து ஹிந்தி பட வாய்ப்புகள் பரி போய்விடும் என்பதால், புறநானூறு படத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் கதையை சுதா கொங்கராவிடம் மாற்ற சொல்லி இருக்கிறார் சூர்யா.

ஆனால் அதற்கு சுதா கொங்கரா இந்த படத்தின் மையக் கருவே இதுதான் மாற்ற முடியாது என தெரிவிக்க, இதனால் சுதா கொங்கராவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா, இந்த நிலையில் சூர்யாவுக்கு பதில் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தொடங்கியிருக்கும் சுதா கோங்காரா? படப்பிடி பிடிப்புக்கு சில நாட்களுக்கும் முன்பு, சுதா கொங்குரா வீட்டின் கதவைத் தட்டி இருக்கிறார் சூர்யா.

மீண்டும் புறநானூறு படத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் சூர்யா, ஆனால் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதற்கான அணைத்து வேலைகளும் முடித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்ன உடன், சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு உங்களை கமிட் செய்தால் அது என்னை நம்பி வந்த சிவகார்த்திகேயனுக்கு நான் செய்யும் துரோகம் என தெரிவித்த சுதா கொங்கரா.

மறைமுகமாக உன் இச்சட்டத்துக்கு வேண்டாம் என்று நீ சொல்லிட்டு போறது, பின்பு ஒரு படம் பிளாப், மற்றொரு படம் கைவிட்டு போனதும் என்றதும் திரும்ப வாய்ப்பு கேட்டு வருவது என்ன பழக்கம் சூர்யா என்று மறைமுகமாக பேசி சூர்யாவை அனுப்பி வந்துள்ளார் சுதா கொங்கரா என்கிறது சினிமா வட்டாரங்கள். அதே நேரத்தில் தற்பொழுது சூர்யா கைவசம் பெரியதாக சொல்லும்படி எந்த படமும் இல்லாதால், சூர்யாவின் சினிமா வாழ்கை மிக பெரிய கேள்விக்குறியாக அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here