மக்கள் யாருமே ரூம் போட்டு யோசிச்சு கங்குவா படத்தை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்யவில்லை. பணம் கொடுத்து சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் தந்தை சிவக்குமார் கொடுத்த பில்டப்பை நம்பி படம் பார்க்கப் போனவர்களின் ஏமாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட கோபத்தின் உச்சிதான் இன்று கங்குவா படத்தை பாரபட்சம் பார்க்காமல் மக்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
ஆனால் ஜோதிகா கங்குவா படம் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையில், என்னமோ இந்த கங்குவா ஹாலிவூட் ரேஞ்சுக்கு தரமான படைப்பு போன்றும், தமிழக மக்களே அந்த படத்திற்கு எதிரானதாக பிரச்சாரம் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார் ஜோதிகா. ஆனால் ஜோதிகா ஒன்றை புரிந்து கொள்ள மறந்து விட்டார்.
அதாவது ஜோதிகாவின் திரை வாழ்க்கையிலும் சரி சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் சரி எத்தனையோ படங்கள் வெற்றி படங்கள் அடைந்திருக்கு. அந்த வெற்றி படங்களை கொடுத்தவர்களும் இந்த மக்கள்தான். அன்று என்றாவது ஜோதியாகவோ சூர்யாவோ இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி என்று சொல்லி இருக்கிறார்களா.? ஆனால் இவர்களின் கங்குவா படம் தோல்வி அடைந்த உடனே அந்த படம் எதனால தோல்வி அடைந்தது.
அந்த படத்தில் குறைகள் என்ன என்பதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை இது போன்ற தவறு நடக்காது என்று மக்களிடம் மன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டு. காசு கொடுத்து படம் பார்த்து ஏமாந்த மக்கள் குறை சொல்வதை ஏற்று கொள்ளாமல், மக்களை ஜோதிகா குற்றம் சொல்வது என்பது ஜோதிகாவின் மக்கள் மீதான வன்மமே வெளிப்பட்டுள்ளது என்று படம் பார்த்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
ஒரு குப்பை படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று மக்களிடம் பூச்சாண்டி காட்டி, பல கோடி கல்லா கட்ட நினைத்தவர்களின் சாயத்தை மக்கள் வெளுக்க வைத்துள்ளார்கள் என்றுதான் இந்த கங்குவா படம் மூலம் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையில் தாங்கள் எடுத்தது ஒரு குப்பை படம் தான் என்று ஒப்புக்கொள்ளாமல், பணம் கொடுத்து படத்தைப் பார்த்து ஏமார்ந்த மக்கள் வைக்கும் விமர்சனத்தை குறை சொல்வதெல்லாம் ஜோதிகா செய்வது மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்று இரண்டு அரை மணி நேரம் திரையரங்குகளில் கங்குகா படம் பார்த்து காது வலி வந்து பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கொந்தளிப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக கங்குவார் படம் பார்த்த பின்பு கங்குவா வெளியாவதற்கு முன்பு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா, சிவகுமார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா போன்றவர்கள் பேசிய பேச்சுகளை உன்னிப்பாக கவனித்தால், மக்கள் எந்த அளவுக்கு அடி முட்டாளாக இருப்பார்கள் என்று இவர்கள் எண்ணி இப்படி பேசி இருப்பார்கள் என்பது மேலும் மக்களை கோபம் அடையச் செய்துள்ளது.
ஒரு குப்பை படத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இந்த மாதிரி ஒரு படமே கிடையாது, இந்த படத்தை பார்த்து இந்தியாவே வாயை பிளக்கும், 2000 கோடி வசூல் அடிக்கும், 50 மொழியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இப்படி வெறும் பொய்யாக அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி கங்குவா மிக பிரம்மாண்டம் என்கின்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி பல கோடி மக்களிடமிருந்து சுருட்ட நினைத்த சூர்யா உட்பட ஒட்டுமொத்த கங்குவா பட குழுவுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்து நாங்கள் ஒன்றும் முட்டாள் என நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஜோதிகா மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இனி பேசவேண்டும் என படம் பார்த்து ஏமார்ந்த மக்கள் தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.