நான் மும்பை வாசி… இந்தி எதிர்ப்பு நோ… சூர்யா அடித்த அந்த பல்டி…

0
Follow on Google News

சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறிய சூர்யா. மேலும் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா, ஏற்கனவே மும்பையில் சூர்யாவுக்கு வீடு இருக்கையில் மேலும் மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார்.

இந்நிலையில் மும்பையை பூர்விகமாக கொண்ட ஜோதிகா அவருடைய தாய் தந்தை இருவரும் இந்தி சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, தன்னுடைய கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஜோதிகா ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டாய் இருந்தார். ஆனால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்து கமிட்மென்ட் உள்ளதால், வாடிவாசல் படம் தொடங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை முடித்துவிட்டு அடுத்து ஹிந்தி பக்கம் செல்கிறார் சூர்யா.

இந்த நிலையில் சுதா கொங்கார இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து மீண்டும் சூரியாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்க முடிவு செய்து இருந்தார் சூதா கொங்கரா. அதற்கான ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புறநானூறு படத்தில் 1960 காலகட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் காட்சிகள் இடம் பெற இருக்கிறது.

இந்த படத்தின் கதையின் அதி முக்கியத்துவம் காட்சியாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகி உள்ள சூர்யா ஹிந்தி படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் இந்தி எதிர்ப்பு போராட்டம் கொண்ட ஒரு கதையில் நடித்தால் தமிழக ரசிகர்கள் ஒரு தரப்பு நம்மை கொண்டாடினாலும் கூட ஹிந்தியில் விரட்டி விரட்டி நம்மை வெளுத்து விடுவார்கள் என்கின்ற அச்சத்தில் புறநானூறு படத்தில் இந்தி வெறுப்பு காட்சியை தவிர்க்கலாம் என்று தெரிவித்து இருந்திருக்கிறார்.

ஆனால் சுதா கொங்காரா இந்த படத்தில் கதையின் முக்கியத்துவமே இந்த இந்திய எதிர்ப்பு போராட்டம் தான் அந்த வகையில் இதை தவிர்க்க முடியாது என சொன்னதும், உடனே அப்படினா இந்த படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்திருந்திருக்கிறார் சூர்யா. இது சூதா கொங்கராவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழ் பற்று சார்ந்து பல கருத்துக்களை அரசியல் ரீதியாக தெரிவித்தவர் சூர்யா.

அந்த வகையில் நிச்சயம் இந்த கதையில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்து இருந்த சுதா கொங்கராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதற்கு முன்பு சூர்யா மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட போதும் சரி, நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட போதும் சரி, தமிழக மக்கள் பலரும் சில்லறைய சிதற விட்டு சூர்யாவை கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று மும்பைக்கு சென்ற பின்பு நான் தன்னை மும்பை வாசி போன்று கருதி கொண்டு ஹிந்தி எதிர்ப்பு குறித்த கதை என்றதும் அந்த படத்திலே நடிக்க மறுத்துவிட்டார் சூர்யா, இந்த தகவல் அறிந்த தமிழக ரசிகர்கள் பலரும் சூர்யா உனக்காகவா நாங்கள் எல்லாம் சில்லறையே சிதற விட்டோம் என்று வருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.