சமீபத்தில் நடிகர் சூர்யா பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் படு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சூர்யா நடிப்பில் சிங்கம் படம் வெளியான பின்பு அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வருகிறார்கள், இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம்தில் உள்ள கிராமத்தில் அதிகாலை சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் கட்டவுட்டுகளை கட்டி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கட்டவுட் ஒன்று மின்சார வயர் மீது உரசி மின்சாரம் பாய்ந்து 19 வயது வெங்கடேஷ் மற்றும் 20 வயது சாய் ஆகிய இரண்டு சூர்யா ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் உச்ச நடிகர்கள் மீது கடுமையான விமசனங்கள் எழுந்துள்ள நிலையில், மரணம் அடைந்த ரசிகர்கள் குடும்பத்தினரை சூர்யா தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிது.
மேலும் மரணம் அடைந்த ரசிகர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாகவும் சில உதவிகள் செய்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.இருந்தாலும் நடிகர்களுக்கு கட் வைத்து ரசிகர்கள் மரணம் அடைவது இது முதல் முறை இல்லை, தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருப்பதால், முன்னணி நடிகர்கள் வெளிப்படையாக என்னுடைய ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு கட்டளையிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
சூர்யா பிறந்த நாள் அன்று தமிழகத்தில் நடந்த மற்றொரு சம்பவம் தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு போட்டியாக சூர்யா ரசிகர்களுக்கும் நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சூர்யா பிறந்த தினத்தில் அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர்கள் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், ’’ உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும் விரைவில் நம்ம ஆட்சி வரும்பார்” என தெரிவித்து ஒரு பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக நடிகர் சூர்யா பேசுவது போன்ற காட்சி அமைத்து போஸ்டர் அடித்து மதுரையில் சூர்யா பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ஒட்டியிருந்தனர். மதுரையில் சூர்யா ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது இது முதல் முறை அல்ல.
கடந்த 2020ம் ஆண்டு சூர்யா பிறந்த நாளின் போது “திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!” என்று வாசகங்கள் அச்சிடப்பட்டு மதுரையில் சூர்யா ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இரண்டு வருடங்களுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது சூர்யா ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர் சூர்யா தந்தை சிவகுமார் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மகன் சூர்யாவை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்த சிவகுமார், இதெல்லாம் சரியில்லை, ஆரம்பத்திலே இதெல்லாம் தடுக்கவில்லை என்றால், மிக பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என மகன் சூர்யாவுக்கு தந்தை சிவகுமார் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படும் நிலையில், இனி வரும் காலங்களில் இது போன்ற அரசியல் போஸ்டர்களை தவிர்க்கும் படி தன்னுடைய ரசிகர்களை சூர்யா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.