கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சூர்யா நடித்த எந்த ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறவில்லை. சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரைபோற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கடந்த 10 வருடங்களில் சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் வெற்றி படமாகும். அந்த வகையில் சூர்யா ஒரு ஓடிடி நடிகர் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால், நடிகர் விஜய் இருக்கும் இடத்திற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது, அதில் சூர்யா இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அந்த இடத்தை பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தாலும், அவருடைய மனைவி பேச்சைக் கேட்டு செய்த ஒவ்வொரு செயலும் அவருடைய சினிமாக்கெரியரே நாசம் செய்து விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்.
பொதுவாக நடிகர் சூர்யா உடம்பை வருத்திக்கொண்டு நடிக்க கூடிய ஒரு நடிகர் இந்த நிலையில், அடுத்தடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு என அடுத்தடுத்து வெற்றி பெற இயக்குனர்களுடன் கைகோர்த்து இருந்த நடிகர் சூர்யா இந்த அனைத்து படத்திலிருந்து வெளியேறினார். மேலும் குறிப்பாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய இயக்குனர்களிடம் இருந்து சூர்யா விலகியது தற்போது அவருடைய சினிமா கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
சூர்யா இன்று தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஒரு டாப் நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குனர் பாலா, ஆனால் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் சூர்யா. அதே போன்று சூர்யா தோல்வி படங்களை கொடுத்து வந்த ஒரு காலகட்டத்தில் சூரரை போற்று என்கின்ற படத்தின் மூலம் ஒரு வெற்றியை உருவாக்கி தந்தவர் இயக்குனர் சுதா கொங்காரா.
அந்த வகையில் சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட்டாகி இருந்த நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா பேச்சை கேட்டு அந்த படத்தின் கதையில் சில மாற்றங்களை கொண்டு வர செய்திருக்கிறார். ஆனால் படத்தின் இயக்குனர் கதையை மாற்ற முடியாது என்றதும் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் நடிகர் சூர்யா. அதனைத் தொடர்ந்து, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு காத்துக்கொண்டிருக்கையில்,
வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக, குறிப்பாக அந்த படத்தில் கமிட்டாகி இருந்த நடிகர் இயக்குனர் அமீருடன் சூர்யாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படத்தில் அமீருக்கு பதில் வேற ஒரு நடிகரை மாற்ற வலியுறுத்தி வந்துள்ளார் சூர்யா. ஆனால் அதற்கு வெற்றிமாற முடியாது என தெரிவித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் சூர்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார் சூர்யா.
இப்படி ஒவ்வொரு படத்திலும் சூர்யா வெளியேறுவதற்கு காரணம் அவருடைய மனைவி சொல்லை மந்திரம் என்று அவருடைய மனைவி பேச்சைக் கேட்டு நடந்து கொள்வதால் தான் என்று பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் தான் சூர்யாவின் சினிமா கிரியரை முடிவு செய்ய இருக்கிறது.
அந்த வகையில் கங்குவா படம் ஒரு தோல்வியை சந்தித்தால், சூர்யாவின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பதால் கங்குவா சூர்யாவுக்கு கை கொடுக்குமா என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.