நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்கள் நடித்து சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆரம்ப கட்டத்தில் ஒரு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சூர்யா, அந்த காலகட்டத்தில் நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று கொடுத்தவர் இயக்குனர் பாலா.
இதனை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக உயர்ந்தவர், தொடர்ந்து ஹரி இயக்கத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து சூர்யா டாப் நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு சூர்யா சென்றதில் முக்கிய காரணமாக இருந்தவர்களில் பாலா, கௌதம் மேனன், ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த மூன்று இயக்குனர்களும் தொடர் சரிவை சந்தித்து மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க முயற்சியில் ஈடுபட்டனர் ,அந்த வகையில் இந்த மூன்று இயக்குனர்களுமே சூர்யாவை சந்தித்து பல கதைகள் சொல்லி கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான யானை படத்தில் முதலில் சூர்யா நடிகர் இருந்தது,
ஆனால் ஹரி – சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் இந்த படம் கைவிடப்பட்டது. பின்பு அருண் விஜய்யை வைத்து யானை படத்தை எடுத்து ஹிட்ம் கொடுத்தார் ஹரி. அதே போன்று பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வனங்கான் படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் பாதியிலே கைவிடப்பட்டுள்ளது.
இதன் பின்பு அருண்விஜய் வைத்து வணங்கான் படத்தை எடுத்து வெற்றியும் பெற்றார் பாலா, அதேபோன்று இயக்குனர் கௌதம் வாசுதேவன் நீண்ட நாட்களாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்க கால் சீட்காக காத்திருக்கிறார்.அனால் சூர்யா கடைசி வரை கெளதம் மேனனை காக்க வைத்து ஏமாற்றி விட்டார். ஆனால் சூர்யாவின் கர்மா என்று தான் சொல்ல வேண்டும், அப்படி அவர் வேண்டாம் என்று தூங்கி எறிந்த படங்கள் அனைத்தும் வெற்றி.
அதே நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு படத்தில் நடிக்காமல் போவதற்கு அவர்களூக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனான் என்னைப் பொறுத்தவரை துருவ நட்சத்திரம் படம் பண்ணுவதற்கு சூர்யா யோசித்திருக்க கூடாது என தெரிவித்தவ கவுதம் மேனன்.
சூர்யா உடன் சேர்ந்து காக்க காக்க படத்தில் பணியாற்றினோன், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்க மோகன்லான் மற்றும் இந்தியில் நானா பட்டேக்கர் ஆகிய இருவரிடம் கேட்டோம். அவர்களால் நடிக்க முடியவில்லை என்றது. சூர்யா தான் தானே அப்பா மகன் இரு கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறினார். ஆனால் துருவ நட்சத்திரம் கதை கேட்டு நிறைய பேசினோம். ஆனாலும் அந்த கதையில் சூர்யாவுக்கு நம்பிக்கை வரவில்லை என தெரிவித்த கோவுதாம் மேனன்.
ஏதாவது ரெஃபரன்ஸ் இருக்கிறதா என சூர்யா தன்னிடம் கேட்டதாகவும், என்னிடம் ரெஃபரன்ஸ் எல்லாம் இல்லை. நீங்கள் இருந்தால் நான் வேற மாதிரி ஒன்னு பண்ண முடியும் என கவுதம் தெரிவித்துள்ளார், காக்க காக்க , வாரணம் ஆயிரன் எடுத்த இயக்குநர் இந்த படத்தையும் எடுக்க முடியும் என்று சூர்யா நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என கவுதம் மேனன் பேசியது ஒரு காலத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு இந்த நிலையா என பரிதாப பட வைக்கிறது.