நீங்க தான் என்னை காப்பாத்தணும்… கங்குவா வெற்றிக்காக விஜய்யிடம் கையேந்தும் சூர்யா..

0
Follow on Google News

சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் அவசர அவசரமாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது இதற்கான காரணம் தான் தற்போது இணையதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூர்யா.

சில வருடங்களாகவே சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் வெளியான ஜெயிபீம் மற்றும் சூரறைபோற்று படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அந்த 2படங்களும் தியேட்டரில் வெளியாகாமல் OTT -ல் தான் வெளியாகியிருந்தது. கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி சூர்யாவுக்கு வெற்றி படமாக அமைந்த படம் எதுவென்று பார்த்தால் அது சிங்கம் 2 படம் தான்.

தற்போது மிக பெரிய பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தின் வெற்றியில் தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையே இருக்கிறது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் போய்விட்டால் இதோடு சூர்யாவின் சினிமா CARRIER- யே முடிவுக்கு வரும் சூழலில் இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே மக்கள் அதிகம் மூழ்கி கிடப்பது சமூகவலைத்தளங்களில்தான்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஹாலிவுட் பட பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். கங்குவா படத்தின் ட்ரைலர் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே ஒரு படத்தின் ட்ரைலரை படம் வெளியாகுவதர்கு 2 வாரங்களுக்கு முன்பு தான் வெளியிடுவார்கள்.

ஆனால் கங்குவா படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் சூழலில் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதற்குப் பின்னால் வேறு முக்கிய காரணம் உள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய காத்திருக்கின்றனர்.

அதோடு வருகின்ற ஆகஸ்ட் 15 விக்ரமின் தங்கலான் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி விஜய்யின் கோட் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அவசரமாக கங்குவா ட்ரெய்லர் வெளியிட காரணம் குறிப்பாக கோட் படம் கிட்டதட்ட 1500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில் கங்குவா படத்தின் டிரைலரை தங்கலான் மற்றும் கோட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது படத்தின் ஆரம்பம் அல்லது இடைவெளியில் திரையிட இருக்கின்றனர். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைய உள்ளது. அதுவும் ஒவ்வொரு தியேட்டரிலும் கங்குவா ட்ரெய்லர் வெளியிட ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அதற்கெல்லாம் இப்போது படக்குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்போதே ட்ரெய்லர் வெளியிட்டால் தான் அடுத்ததாக தியேட்டரிலும் கோட் படத்தின் ரிலீஸ் போது ட்ரெய்லர் திரையிடப்படும். ஆகையால் தான் திடீரென படக்குழு இந்த முடிவை எடுத்து கங்குவா ட்ரெய்லரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பத்து வருடங்களாக திரையரங்குளில் வெளியான சூர்யா படம் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், விஜய் நடிப்பில் வரும் கோட் திரைப்படத்தின் இடைவேளையில் கங்குவா படத்தின் ட்ரைலரை வெளியிட்டு விஜய் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது கங்கா படக்குழு.