தேவையில்லை என விஜய் தூக்கி போட்டதை எடுத்த சூர்யா.. இனி சூர்யா நிலைமை.!

0
Follow on Google News

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்கத்தி அம்மன் போன்று ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் மாசாணி அம்மன் என்கின்ற அடுத்த படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தால் ஆர் ஜே பாலாஜி, இந்த படத்தில் நயன்தாரா மாதிரி ஒரு முன்னணி கதாநாயகியை வைத்து எடுப்பதற்கும் திட்டமிட்டு இருந்தார் ஆர் ஜே பாலாஜி.

ஆனால் மூக்குத்தி அம்மன் என்கின்ற டைட்டிலை தயாரிப்பாளர் ஐ சரி கணேசன் கைப்பற்ற, ஆர் ஜே பாலாஜியிடம் அந்த டைட்டில் கைநழுவிப் போனது, இதனைத் தொடர்ந்து கதையில் பெண் கடவுளாக உள்ள கதாபாத்திரத்தை ஆண் கடவுளாக மாற்றலாம் என்று அந்த கதையை பெரிய அளவில் மாற்றம் செய்து நடிகர் விஜயை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

ஆனால் கதையை கேட்ட நடிகர் விஜய் இந்த கதையெல்லாம் நமக்கு செட் ஆகாது தம்பி வேற நடிகரை பாருங்க என்று அனுப்பி வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து அதே கதையை நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. அதாவது பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒரு பெண் கடவுளை வைத்து தான் பல படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் ஒரு ஆண் கடவுளாக சூர்யா நடிகர் நடிக்க இருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் சூர்யாவுக்கு கடவுள் போன்ற ஒரு கெட்டப் செட் ஆகுமா என்றால் நிச்சயம் செட் ஆகாது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். அதே நேரத்தில் இந்த படம் வெற்றி பெறவும் தோல்வி பெறவும் கதையும் திரைக்கதையில் தான் முக்கியம், அந்த வகையில் திரைக்கதை மூலமாக மக்களை திருப்தி படுத்தினால் மட்டுமே இந்த படம் வெற்றி அடையும்.

இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்க இருப்பது பக்தி படம் என்பதால், ஏற்கனவே சூர்யா – ஜோதிகா மீது இவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிம்பம் இருந்து வருவதால், ஒரு பக்தி படத்தில் மீண்டும் நடித்தால் அந்த கதாபாத்திர த்துடன் அட்டாச் செய்து சூர்யாவை மக்களால் பார்க்க முடியாது என்பதால், அந்த ஒரு தோற்றத்தை முறியடிப்பதற்காக சூர்யாவும் ஜோதியாகவும் தற்பொழுது கோவில் கோவிலாக செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

இப்படி கோவில் கோவிலாக சூர்யாவின் ஜோதியாகவும் செல்வது ஜோதிகாவிற்கு வேறு வகையில் விமர்சனம் வந்துள்ளது. காரணம் கடந்த காலங்களில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்து கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மருத்துவமனைக்கு கொடுக்கலாம் பள்ளிக்கூடத்திற்கு கொடுக்கலாம் என்றெல்லாம் ஜோதிகா கருத்து தெரிவித்து மிகப்பெரிய சர்ச்சைகள் சிக்கினார்.

இந்த நிலையில் தற்பொழுது கோவிலுக்கு ஜோதிகா செல்வதை வைத்து எதற்காக ஜோதிகா கோவிலுக்கு செல்கிறார், மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் சென்று விசிட் அடிக்கலாமே என்று மக்கள் ஜோதிகாவை வைத்த அதே விமர்சனத்தை அவரை நோக்கி வைக்கிறார்கள், இந்த நிலையில் கோவிலுக்கு போவதும் ஜோதிகாவின் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும்,

கடந்த காலங்களில் ஜோதிகாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எதிர்காலத்தில் தொடர்பு படுத்த படும் என்பதை மிக கவனமாக வைத்து இனிமேலாவது பேச வேண்டும், அதே நேரத்தில் ஜோதிகா கோவில் கோவிலாக ஏறி நாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் இல்லை என்கின்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்வது மக்கள் மத்தியில் எடுபடுமா என்று உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here