தயவு செய்து என் மகன் சூர்யாவை விட்டுடுங்க… பாவம் அவன் நல்லா இருக்கட்டும்… டென்ஷனான சிவகுமார்…

0
Follow on Google News

நடிகர் சிவக்குமார் இயற்பெயர் பழனிச்சாமி, சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முதல் படத்தில் கமிட்டான போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், பழனிச்சாமி என்கின்ற பெயர் சினிமாவிற்கு சூட்டாகவில்லை, அதனால் சிவக்குமார் என அவருக்கு பெயரை மாற்றுகிறார்.அதன் பின்பு சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக சிவக்குமார் வலம் வருகிறார்.

அவருக்கு திருமணம் ஆகிறது, முதல் குழந்தை சூர்யா பிறக்கிறார். நேரடியாக தனக்கு சிவகுமார் என பெயரிட்ட சரவணனை சந்தித்து, சார் எனக்கு நீங்க சிவகுமார் என்று பெயரிட்டீங்க இன்றைக்கு நான் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் இருக்கிறேன். அதனால் என்னுடைய மகனுக்கு உங்கள் பெயரை சரவணன் என சூட்டுகிறேன் என தெரிவித்து. சூர்யா பிறந்த போது அவருக்கு சிவகுமார் சூட்டிய பெயர் சரவணன்.

தன்னுடைய மகனை மிக ஒழுக்கமாக வளர்கிறார் கல்லூரி படிப்பை முடித்த சூர்யாஅம்பத்தூரில் ஒரு கார்மெண்ட்ஸ் இல் சூப்பர்வைசராக மாதம் 7500 சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரிப்பில் நேருக்கு நேர் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருந்தது அஜித். ஆனால் சிறு பிரச்சனையால் நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் வெளியாகிறார்.

இந்த நிலையில் அஜித்துக்கு பதில் எந்த நடிகரை தேர்வு செய்யலாம் என்று வசந்த் அலைந்து கொண்டிருந்த பொழுது, மணிரத்தினத்தின் மனைவி சுகாசினி நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், அதில் மூத்த மகன் சூர்யா நல்ல தோற்றத்துடன் இருப்பார், அவரை இந்த படத்தில் அறிமுகம் செய்யலாம் நீங்கள் சிவகுமாரை நேரில் சந்தித்து பேசுங்கள் என்று தெரிவிக்க, இயக்குனர் வசந்த் நடிகர் சிவகுமாரை நேரில் சந்தித்து தங்களுடைய மூத்த மகனை என்னுடைய இயக்கத்தில் நடிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன் என்கிறார் வசந்த்.

சிவக்குமாருக்கு கோபம் என்னுடைய பையன் இப்பதான் கார்மென்ட்ஸ்ல சூப்பர்வைசரா பொறுப்பா ஒரு வேலையில் இருக்கிறான். அவன் நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறான் நான் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன். அந்த இடத்தில் அவனுக்கு சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் கட்டிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் அவன் வாழ்க்கையே கெடுத்து விடாதிர்கள், தயவு செய்து கிளம்புங்க என்று கையெடுத்து கும்பிட்டு அவர்களை வழிய அனுப்பி வைத்துள்ளார் சிவக்குமார்.

இதன் பின்பு இயக்குனர் வசந்த் சிவகுமார் வீட்டில் நடந்த சம்பவத்தை நேருக்கு நேர் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்தினரிடம் தெரிவிக்கிறார், மணிரத்தினம் சிவகுமாரை தொடர்பு கொண்டு சார் நிச்சயம் உங்க பையன் சினிமாவுல மிகப்பெரிய ஒரு இடத்துக்கு வருவார் நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள் என்று ஒரு வழியாக சம்மதம் பெற்று, சிவக்குமாரும் மணிரத்தினத்தின் மீது இருந்த நம்பிக்கையில் தன்னுடைய மகன் சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் செய்ய பச்சைக்கொடி காட்டுகிறார்.

நேருக்கு நேர் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் மணிரத்தினம், சரவணன் என்கின்ற பெயர் சினிமாவில் சூட்டாகவில்லை என்று சூர்யா என்று பெயர் சூட்டியது மணிரத்தினம் தான். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு நடிப்பே வரவில்லை, உடனே வசந்த் ஒரு பத்து நாள் தன்னுடைய உதவி இயக்குனரிடம் சொல்லி முதலில் சூர்யாவுக்கு நடிப்பை கற்றுக் கொடுங்கள் என்று தெரிவிக்கிறார்.

அதன் பின்பு பத்து நாட்கள் சூர்யாவிற்கு ரஜினி கமல் என பல நடிகர்கள் நடித்த படங்களின் வி சி ஆர் கேசட்டுகளை வாங்கி போட்டு நடிப்புகளை சொல்லி கொடுக்கிறார்கள் உதவி இயக்குனர்கள் . தன் பின்பு ஓரளவு நடிப்பை கற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு வருகிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வசந்திடம் பலமுறை திட்டி வாங்கி ஒரு வழியாக நேருக்கு நேர் படத்தில் நடித்து முடித்தார் சூர்யா.

ஆனால் ஆரம்ப கட்டத்தில் சூர்யா நடித்த படங்கள் சரி வர போகவில்லை. ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற எண்ணமே இல்லாமல் எதார்த்தமாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் சூர்யா சினிமா மீது கொண்ட பற்றினால் பாலா இயக்கத்தில் வந்த நந்தா படத்தில் தன்னுடைய முழு நடிப்புத் திறமையும் வெளிக்கொண்டுவந்து இன்று மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சூர்யா.