நடிகர் சூர்யா ஜோதிகாவை காதல் செய்து கொண்டிருந்த பொழுதே அவருடைய காதலை சூர்யா தந்தை சிவக்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நீண்ட கால போராட்டத்திற்கு பின்பு ஒரு கட்டத்தில் மகன் சூர்யாவின் காதலை ஏற்றுக்கொண்டு வேற வழி இன்றி சூர்யா – ஜோதிகா இருவரின் திருமணத்தை நடத்தி வைத்தார் சிவகுமார். ஆனால் திருமணத்திற்கு முன்பு ஜோதிகாவிடம் சில கண்டிஷன் போட்டுள்ளார் சிவகுமார்.
அதாவது திருமணம் முடிந்த பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது. குடும்பத்தை பார்த்துக்கொண்டு குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று சிவக்குமார் கண்டிஷனை ஜோதியாக ஏற்றுக் கொண்டதால்தான், சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு சிவகுமார் ஒப்புக்கொண்டார் என்று அன்றைய காலகட்டத்தில் பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு பின்பு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா, இரண்டு குழந்தைக்கு தாயான பின்பு 36 வயதிலேயே என்கின்ற படத்தில் தன்னுடைய கணவர் சூர்யாவை கன்வின்ஸ் செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய போதே சிவகுமாருக்கு குடும்பத்துக்குள் எதிர்ப்பு கிளப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 36 வயதினிலே படத்திற்கு பின்பு அடுத்தடுத்து சூர்யா படங்களில் கமிட்டானது மாமனாருக்கு பிடிக்கவில்லை.
இதனை தொடர்ந்து கூட்டு குடும்பத்தில் இருந்தால் சுதந்திரம் பாதிக்கப்டுவதாக உணர்ந்த ஜோதிகா கணவர் சூர்யாவை அழைத்து கொண்டு மும்பையில் தனிக்குடித்தனம் சென்றார் ஜோதிகா. ஜோதிகா மும்பை சென்ற பின்பு இனி நம்மை கேட்க யார் இருக்கா என்கிற தோரணையில் அவருடைய உடையில் மாற்றம் ஏற்ப்பட்டது. இது மிக பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுக்க சூர்யா முன்னனி இயக்குனர்கள், பாலா, வெற்றி மாறன், சுதா கொங்கோரா போன்றவர்களின் படத்தில் கமிட்டாகி இருந்தார். ஆனால், இவர்கள் அனைவரின் படத்திலும் இருந்து சூர்யா வெளியேறிவிட்டார். ஜோதிகாவின் தூண்டுதலின் பேரில் தான் தன்னுடைய குருநாதர் பாலா உடன் சண்டையிட்டு சூர்யா வெளியேறியதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் ஒரு சில பிரச்சினை காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார் சூர்யா. மேலும் சுதா கொங்காரா படத்தில் ஜோதிகா தலையிட்டு இதில் இந்திய எதிர்ப்பு போராட்டம் காட்சியை நீக்க வேண்டும், இந்த காட்சி இருந்தால் தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு வரவேற்பு இருக்கும் ஆனால் இந்தி சினிமாவில் வரவேற்பு இருக்காது என தெரிவிக்க.
அதற்கு சுதா கொங்கரா மறுப்பு தெரிவிக்க அந்தப் படத்தில் இருந்தும் சூர்யா வெளியேறினார். இப்படி முக்கிய இயக்குனர்கள் படத்திலிருந்து முழுவதும் வெளியான சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கங்குவா மண்ணை கவ்வியுள்ளது. மேலும் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு சுதா கொங்கரா படத்தில் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் கமிட்டான போதே உன்னால தான் நல்ல பிராஜெட் கைவிட்டு போச்சு என ஜோதிகாவிடம் சூர்யா அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இப்படி சிறு சிறு சண்டை காரணமாக கங்குவா படத்தின் ப்ரோமோஷன் மும்பையில் நடந்த போது மும்பையில் இருந்த ஜோதிகா தன் கணவருக்காக ப்ரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் கங்குவா தோல்விக்கு பின்பு சூர்யா ஜோதிகா இடையில் சிறு சிறு சண்டை உச்சகட்டத்தை நோக்கி சென்று இருப்பதால் இவர்களின் விவாகரத்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்