தேசிய விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சூரரை போற்று படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, சூரரைப் போற்று படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஜி.வி.பிரசாந்த், சிறந்த நடிகைக்கான தேசிய விருது சூரரை போற்று நடிகை அபர்ணாபாலா ஆகியோருக்கு வழக்கப்பட்டுள்ளது.
சூரரை போற்று படத்திற்கு மட்டும் சுமார் 5 தேசிய விருதுகளை வழங்கி கௌரவபடுத்தியுள்ளது மத்திய அரசு. ஆனால் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் வெளியான போதே, சங்கிகள் அந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மூலம் திட்டமிட்டு சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தை கார்னர் செய்து கன்வின்ஸ் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் சுதா கொங்கரா என்கிற திடுக்கிடும் பின்னணியை அப்போதே பிரபல எழுத்தாளர் மதிமாறன் வெளியிட்டிருந்தார்.
இவர் அப்போது வெளியிட்ட திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சூர்யாவின் சூரரை போற்று பட இயக்குநர் மதமாற்றத்தை மதவெறியோடு கண்டித்த சங்கி சிந்தனையாளர். சங்கிகள் சூர்யா குடும்பத்தைக் கார்னர் செய்வதைக் கன்வின்ஸ் செய்வதற்காக இவரை நியமித்துக கொண்டார்களா? ஏற்கனவே காப்பானில் மோடி மாதிரி நேர்மையான பிரதமரை பாதுகாத்தார் சூர்யா. ஆனாலும் பயனில்லை.
இப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கார்னர் செய்து கன்வின்ஸ் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த கருத்து தற்பொழுது சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஒரு தரப்பினர் எழுப்பி வருகின்ற்றனர். அதாவது, சுதா கொங்கரா மற்றும் சூர்யா இடையில் சூரரை போற்று படத்தில் இருந்து நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.
அடுத்து ஒரு படம் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குனராக இருந்தால் தனக்கு கம்போர்ட்டாக இருக்கும் என்று சூர்யா வற்புறுத்தி சுதா கொங்கராவை வணங்கான் படத்தின் உள்ளே கொண்டு வந்துள்ளார்.
இது மட்டுமின்றி சுதா கொங்கரா குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் நடிகர் சூர்யா மிக நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார், அதன் வெளிப்பாடு தான் அவர் நடிக்கும் வணங்கான் படத்தில் சுதா கொங்கரா மகள்கள் இருவரையும் தன்னுடைய படத்தில் பணியாற்றும் வாய்ப்பை கொடுத்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு அரசியல் கருத்துக்களை பாஜக மற்றும் அவர்கள் சித்ததற்கு எதிராக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில்.
சுதா கொங்கரா உடன் ஏற்பட்ட நட்பிற்கு பின்பு சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய அரசு மற்றும் அவர்களுடைய சித்தாந்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது படி படியாக குறைந்து வருவதையும், இயக்குனர் சுதா கொங்கரா உடன் மேலும் நட்பு சூர்யாவுக்கு அதிகரித்து வருவதையும் சுட்டி காட்டி, தற்பொழுது மத்திய அரசு சூர்யாவுக்கு அறிவித்துள்ள தேசிய விருது பின்னனில் சுதா கொங்கரா இருக்கிறாரா என்கிற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
இளையராஜாவுக்கு திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட எம்பி பதவியை, அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதால் தான் இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது என சமீபத்தில் எழுந்த சர்ச்சை போன்று, பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த சூர்யாவை மற்றும் அவரது குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்ய நியமிக்கப்பட்ட சுதா கொங்கரா தான் தற்பொழுது சூர்யாவுக்கு கிடைத்த தேசிய விருதின் பின்னணியில் இருக்கிறார் என்று கூறப்படுவது தவறு என்றும், திறமையின் அடைப்படையில் தான் சூர்யா தேசிய விருதை பெற்றுள்ளார் என பலர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.