அஜித், விஜய்,விக்ரம் , சூர்யா என டாப் நடிகர் வரிசையில் இருந்த சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் சினிமாவில் அட்ரசே இல்லாமல் சென்று விட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு இருவருமே ஹிட் படம் கொடுத்து பல வருடமாகிவிட்டது. இதில் சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடிக்கும் படங்களி்ல் போலியான வசூலை வெளியிட்டு அந்த படம் வெற்றி பெற்றது என்று ஒரு பிம்பத்தை ஏற்ப்படுத்த முயற்சித்தாலும் கூட, சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் புள்ளி விவரத்துடன் அந்த படத்தின் வசூலை வெளியிட்டு சூர்யாவுக்கு ஆப்பு வைத்து விடுகிறார்கள்.
இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான சிங்கம் 2 படம் தான் சூர்யா கொடுத்த கடைசி வெற்றி படம். அதன் பின்பு சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான அத்தனை படங்களும் தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல், சூர்யாவை வைத்து படம் எடுத்த பல முன்னணி இயக்குனர்கள் அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டார்கள். குறிப்பாக இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து அஞ்சான் என்கிற படத்தை இயக்கி அதன் பின்பு அட்ரசே இல்லாமல் சென்று விட்டார்.
அவரை தொடர்ந்து சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்கிற படத்தை எடுத்து இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய சினிமா கேரியரே இழந்து விட்டார். அதே போன்று தற்பொழுது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கி சிறுத்தை சிவா சினிமா கேரியரை இழந்துள்ளார். இப்படி சூர்யா தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதே நிலையில், பல இயக்குனர்களையும் காவு வாங்கி, அவர்களின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வந்தவர் தான் சூர்யா.
இந்நிலையில் சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர்களில், பாலா, ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா இவர்கள் அனைவருமே சூர்யாவின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர்கள், ஆனால் இவர்கள் அனைவருடன் சில கருத்து வேறு பாடு காரணமாக பகையை உருவாக்கி வைத்துள்ளார் சூர்யா, அதனால் பல முக்கிய இயக்குனர்கள் சூர்யாவை வைத்து படம் இயக்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் லிங்குசாமி, பாண்டிராஜ், சிறுத்தை சிவா போன்ற இயக்குனர்கள் சூர்யாவை வைத்து படம் இயக்கி தங்களுடைய சினிமா வாழ்க்கையை துளைத்த நிலையில், சூர்யாவை வைத்து படம் இயக்கினால் அந்த இயக்குனர் சினிமா கேரியர் அவ்வளவு தான், சூர்யா ராசி இல்லாத நடிகர் என்கிற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதால், சூர்யாவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகர் சூர்யா, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு சூர்யா கேரியரிலே படு கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது. கங்குவா படம் சூர்யா சினிமாவுக்கு முடிவுரை எழுதிவிட்டது என்றே சொல்லலாம்.
அப்படி இருக்கையில் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தோல்வியை சந்தித்ததால், அடுத்த இரண்டாம் கட்ட நடிகர், அண்ணன் கதாபாத்திரம், அப்பா கதாபத்திரதில் தான் சூர்யா நடிக்கும் சூழல் உருவாகும். அந்த வகையில் சூர்யா அடுத்து ஒரு படம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வரும் நிலையில், நமக்காக இனி படம் ஓடுவது முடியாத காரியம், ஓடுகிற ஒரு குதிரையில் ஏறி வெற்றியை ருசித்து விடலாம் என்கிற முடிவுக்கு சூர்யா வந்துவிட்டார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
அந்த வகையில் சூர்யா அடுத்த நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் விஜய் சேதுபதி சூர்யாவுடன் இணைந்து நடித்தால் அவருடைய சினிமா கேரியர் சரிவை சந்திக்கும் என் பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.