சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி இல்லை என உருக்கமாக அவர் பேசியதை பார்த்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது, தமிழ் சினிமாவுக்கு, தமிழக மக்களும் ரஜினிகாந்துக்கு பெயர், புகழ் பணம் என தேவைக்கு அதிகமாக கொடுத்து அவரை உச்சத்தில் வைத்திருந்தாலும், அவரது குடும்ப சூழலால் ரஜினிகாந்த் நிம்மதியின்றி தவிப்பதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதாவது. இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது தான் முக்கியம், நாம் நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம், ஆகையால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லை என்றால் மகிழ்ச்சியாக மருத்துவமனை செல்லாமலே நடமாடிக் கொண்டிருக்கும் போதே போய் சேர்ந்து விட வேண்டும்.
நான் கூட இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தவன், எனக்கு பணம் புகழ், பெயர் என மிக பெரிய உச்சத்தில் இருந்தாலும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களை பார்த்த இருந்தாலும், சந்தோஷம், நிம்மதி என் வாழ்க்கையில் பத்து சதவீதம் கூட இல்லை, ஏனென்றால் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என ரஜினிகாந்த் பேசியபோது அந்த அரங்கில் இருந்தவர்கள் கண் கலங்கியதை பார்க்க முடிந்தது.
ரஜினிகாந்த் இந்த பேச்சுக்கு அவரதும் மனைவி மற்றும் மகள்கள் தான் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. ரஜினிகாந்த் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து தமிழகம் மக்களின் வேண்டுதலால் மறுபிறவி எடுத்து நாடு திரும்பியதும், சில நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த்.
இதன் பின்பு தான் தொடர்ந்து அவரது குடும்பத்தில் பிரச்சனை உச்சகட்டமாக இருந்தது. இரண்டாவது மகள் சௌந்தர்யா தந்தை விருப்பத்துக்கு மாறாக இயக்குனராக சினிமாவில் என்ட்ரி கொடுக்க அவரது கணவர் அஸ்வினுக்கு அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் நிம்மதியின்றி தவித்த ரஜினிகாந்த். பின்பு விவாகரத்து பெற்ற மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆனால் அந்த நிம்மதியை நிரந்தரமாக நீடிக்க விடாமல் முதல் மகள் ஐஸ்வர்யா, அவருடைய கணவர் தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்து, மீண்டும் தந்தை ரஜினிகாந்த் நிம்மதிக்கு வெட்டு வைத்தார். இப்படி தன்னுடைய இரண்டு மகள்களால் நிம்மதியின்றி தவித்து வரும் ரஜினிகாந்தின் சோகத்தின் வெளிப்பாடு தான், சமீபத்திய அவரது இந்த பேச்சுக்கு காரணம் என கூறப்படுகிறது.