ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார்.இரண்டு படமும் படுதோல்வியை அடைந்ததும் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை ஐஸ்வர்யா. இப்போது தனுஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா பல வருடங்கள் கழித்து லால் சலாம் என்கிற படத்தை இயக்கியிருகிறார்.
இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், மகள் கேட்டுக்கொண்டதால் ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் இடையில் இப்படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘லால் சலாம்’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தினை முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் ரஜினி நடித்த வீடியோ காணாமல் போய்விட்டது. அதனால் பொங்கலுக்கு ரிலிஸ் செய்யலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் திட்டமிட்டப்படி படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில் ‘லால் சலாம்’ பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அதன்படி ‘லால் சலாம்’ படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்படாமல் இருந்ததாம். எந்த நிறுவனமும் படத்தை வாங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனாலே பொங்கலில் படக்குழு படத்தை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரஜினிகாந்தே நேரடியாக சன் டிவி நிறுவனத்திடம் பேசியுள்ளாராம். அவர்களும் ரஜினி கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு ‘லால் சலாம்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளனராம்.
இதனால் ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி தள்ளி போன நிலையில் இப்போது பிப்ரவரி ஒன்பதாம் தேதியை லாக் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காரணம் ரஜினி நேரடியாகவே கலாநிதிக்கு ஃபோன் செய்து இந்த படத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். அடுத்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொள்வாரோ என்ற பயத்தில் வேண்டாம் வெறுப்பாய் இப்போது லால் சலாம் படத்தை சன் டிவி வாங்கியுள்ளது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும் ரஜினியால் கண்டிப்பாக லால் சலாம் படம் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது மறுபக்கம் ரஜினி நடித்திருந்த பல வீடியோக்கள் டெலிட் ஆகியுள்ளது. ஒரு படத்தின் வீடியோ டெலிட் செய்யப்பட்டால், மறுமுறை அந்த வீடியோவை எடுக்க இயக்குனர் தான் செலவு செய்ய வேண்டும். ஆனால் லால் சலாம் படத்திற்காக ரஜினி தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் பேசியுள்ளார். நீங்களே அதற்கான தொகையை கொடுங்கள் அதனை என் சம்பளத்தில் கழித்து விடுங்கள் என்று பேசி உள்ளார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்தால் ரஜினிகாந்தின் சம்பளம் குறைந்துள்ளது.