தனுஷ்க்கு சூரி வெச்ச ஆப்பு… தனுஷை கைவிட்ட வெற்றிமாறன்… என்னடா இது தனுஷ்க்கு வந்த சோதனை..

0
Follow on Google News

நடிகர் சூரி காமெடியனாக அறிமுகமாகி ஜோக்கர் இப்போ ஹீரோவானேன் என்ற டயலாக்கிற்கு ஏற்ப தான் தற்போது ஹீரோ மெட்டீரியல் ஆக மாறி, மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன் தான் சூரியை ஹீரோவாக புதிய அவதாரம் எடுக்க வைத்திருந்தார். இந்நிலையில் சூரி- வெற்றிமாறன் என்ற புதிய காம்போ செட் ஆனதால் வெற்றிமாறனும் சூரியை வைத்து அடுத்த படம் இயக்கப் இருக்கிறார்.

அது வடசென்னை 2 படம் தானா என்றும் தனுஷ் இடத்தை சூரி பிடித்து விட்டாரா என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக வெற்றிமாறன் தனுசை வைத்து படம் இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்ததால், தனுஷும் எந்த படத்தை இயக்கினாலும் அதில் தன்னை வைத்து இயக்க வேண்டும் என்று வெற்றிமாறனை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் கடுப்பான வெற்றிமாறன், விடுதலை படத்திற்கு தனுசை அழைக்காமல் நடிகர் சூரியை வைத்து படம் எடுக்க தொடங்கி விட்டார்.

இதனால்தான் தனுசுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வடசென்னை 2 படமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் தான் தனுஷ் இடத்திற்கு தற்போது சூரியை வெற்றிமாறன் தேர்வு செய்து விட்டாரா என்ற பல தகவல்களும் வெளியாகி உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என 4 படங்களில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்து வெற்றி படங்களை கொடுத்ததால், வெற்றிமாறனின் ஃபேவரிட் ஹீரோவாக தனுஷ் தான் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் காம்போ எப்போது இணையும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். ஆனால், சூரியோ மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அப்டேட் கொடுத்து அசரடித்துள்ளார். இதனால் வெற்றிமாறனின் ஃபேவரைட் ஹீரோ லிஸ்ட்டில் இருந்த தனுஷ் இடத்தை, சூரி கெட்டியாக பிடித்துவிட்டாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதலில் விடுதலை படத்தில் மிரட்டிய சூரிக்கு, அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வீடு தேடிச் சென்றன. அதன்படி, சில மாதங்களுக்கு முன்னர் கருடன், இப்போது கொட்டுக்காளி படங்கள் சூரிக்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதிலும் சூரி தான் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

விடுதலை 2 வெளியானதும் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனால் ரசிகர்கள் அனைவரும் வாடிவாசல் ஷூட்டிங் அப்டேட்டை எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தற்போது சூரி கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதாவது விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் இணையவுள்ளதாக சூரி தெரிவித்துள்ளார். இதுபற்றி விரைவில் மிகப் பெரிய அப்டேட் வெளியாகும் எனவும் சூரி கூறியுள்ளார். அது தான் வடசென்னை-2 படமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் ஏற்கனவே நடிகர் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால் வடசென்னை 2 படத்தில் தனுஷ் நடிக்க போவதில்லை, அதை போல் தனுஷ் நடிப்பதால் வெற்றிமாறனும் அந்த படத்தை இயக்கப் போவதில்லை என பல தகவல்களும் வெளியான வண்ணமே இருந்தது. இந்நிலையில் தான் வெற்றிமாறன் சூரியை வைத்து அடுத்த படம் இயக்க விருப்பதாக அறிவித்துள்ளதால், அது வடசென்னை-2 படமாகத்தான் இருக்கும், அதில் தான் தனுசுக்கு பதில் சூரியை வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தான் வெற்றிமாறனின் ஃபேவரட் ஹீரோ தனுஷ் என்ற இடத்தை சூரி பிடித்து விட்டார் எனவும் பேசப்பட்டு வருகிறது.