காமெடி நடிகர் போண்டாமணி சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடலநலம் தேறி தற்பொழுது புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது ஆபரேஷன் செலவுக்காக சுமார் 7 லட்சம் செலவாகும் என்றதும் ஒரு லெட்டர் எழுதி முன்னணி நடிகர் உனக்கு அனுப்பினேன்.
அதேபோன்று தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கும் அனுப்பினேன். அவர் உடனே என்னை தொடர்பு கொண்டு அவருடைய மேனேஜர் தொலைபேசி எண்ணை கொடுத்து, நான் பிஸியா இருப்பேன் என்னால் உங்களை தொடர்பு கொள்ள முடியாது. எது வேண்டுமென்றாலும் மேனேஜரிடம் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். உடனே அவர் ஏற்பாடு செய்து விடுவார், செலவிற்கும் கவலைப்படாதீர்கள் என தெரிவித்தார்.
அவர் அப்படி சொன்னவுடன் எனக்கு ஒரு புது தெம்பு வந்தது. அதே போன்று அடுத்து ரஜினி சார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்று நினைக்கவே இல்லை, அவரும் என்னை தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் எவ்வளவு செலவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், கை செலவுக்கு என்று தனியாக ஒரு லட்ச ரூபாயை எனக்கு அனுப்பி வைத்தார். நடிகர் சிங்கமுத்து வந்து என்னை நேரில் பார்த்து செலவுக்கு பணம் கொடுத்து உதவி செய்தார்.
இன்று நடிகர் விஜயகாந்த் நல்லபடியாக இருந்திருந்தால் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் யாரிடமும் கையேந்தி வேண்டிய அவசியமும் இல்ல, அவர் என்னை பார்த்திருப்பார். அதேபோன்று நடிகர் விவேக் சார் இருந்திருந்தாலும், எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. என்னை அவரே நன்றாக பார்த்து இருப்பார் என தெரிவித்த போண்டா மணி, பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
பிரான்சிலிருந்து ஒரு சேனலுக்கு வார வாரம் ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பும்படி ஒரு சீரியலை பண்ணி அனுப்ப சொன்னார்கள், அப்போது நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தபோது என் அருகில் காதல் சுகுமார் இருந்தார். இந்த தகவலை நான் காதல் சுகுமாரிடம் தெரிவித்தேன். அதற்கு காதல் சுகுமார் நானே இந்த நிகழ்ச்சியை செய்கிறேன் என்று தெரிவித்தார். இந்த தொடர் சுமார் 55 வாரங்கள் நாங்கள் செய்தோம்.
நான் சின்ன சின்ன ஆர்டிஸ்ட் களை வைத்து அந்த நிகழ்ச்சியை சூட் செய்தேன், அப்போது நடிகர் சூரியை காதல் சுகுமார் தினமும் அழைத்து வருவார், அப்போது நான் சுகுமாரிடம் சத்தம் போடுவேன் தினமும் என்னால் சூரிக்கு 200 ரூபாய் கொடுக்க முடியாது என்றேன், சூரி எனது வீட்டிலே தங்கி சாப்பிட்டு அங்கேயே இருப்பார்.
நான் எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நல்ல நண்பர் தான் சூரி, ஆனால் ஏன் இவரெல்லாம் வெற்றி பெற்ற பின்பு என்னை திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறார்கள் தெரியவில்லை, என்னை நேரில் எங்காவது பார்த்தால் உடனே கட்டிப்பிடிப்பார், ஆனால் இப்பொழுது சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கும் சூரி போண்டாமணி அண்ணனுக்கு இந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுங்க என்று சொல்லலாம் ஆனால் அதை செய்ய முடியவில்லை அவரால் என வேதனையுடன் தெரிவித்தார் போண்டா மணி.