இளையராஜாவிடம் சேட்டையை காட்டிய சூரி…சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சூரி…

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விடுதலை படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் பேசும் போது, எப்போதெல்லாம் சூரியின் பெயரை உச்சரிக்கிரார்களோ அப்போதெல்லாம் , தலைவா.!தலைவா.! என அரங்கில் இருந்தவர்கள் ஓவர் விசிலடித்து கூச்சலிட்டனர்.

இளையராஜா அருகில் நின்று கொண்டிருக்க வெற்றிமாறன் பேச தொடங்கியதும், அரங்கில் இருந்தவர்கள் கூச்சலிட்டு வெற்றிமாறனை பேச விடாமல் செய்தனர், உடனே வெற்றிமாறன் கையில் இருந்த மைக்கை வாங்கிய இளையராஜா, கூச்சலிட வேண்டாம் வெற்றிமாறன் பேசுவதை நான் கேட்க வேண்டும், அவர் இந்த படத்தில் இசையமைக்கும் போது நடந்த அனுபவங்களை பகிர வேண்டும், அதனால் சத்தம் போட வேண்டாம் என்று இளையராஜா கேட்டுக்கொண்டார்.

இருந்தும் அங்கே கூச்சல் சத்தம் அதிகமாக தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் மேடையில் இருந்த சிலர் கூச்சலிட்டவர்களை நோக்கி கைகளை அசைத்து அமைதியாக்க இருக்க செய்தனர். அதன் பின்பு தொடர்ந்து வெற்றிமாறன் பேசி முடித்த பின்பு இளையராஜா பேசத் தொடங்கினார். இளையராஜா பேசும்போது இயக்குனர் வெற்றிமாறனை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

இதுவரை திரையுலகில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை என்றும் வெற்றிமாறன் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையாக உருவாக்குகிறார். திரை உலகிற்கு வெற்றிமாறன் ஒரு முக்கியமான இயக்குனர் என்பதை 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள நான் சொல்கிறேன்.இந்தப் படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என இளையராஜா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அரங்கில் இருந்தவர்கள் விசில் அடித்து கூச்சலிட்டனர்.

இதனால் இளையராஜாவால் அடுத்து பேச முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. மேலும் இளையராஜா என்ன பேசுகிறார் என்பதை அங்கே அரங்கில் இருந்தவர்களால் கேட்க முடியாத அளவுக்கு கூச்சலும் விசில் சத்தமும் மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் டென்ஷனான இளையராஜா, இப்படி கூச்சலிட்டால் நான் எப்படி பேச முடியும், மைக்கை கொடுத்துவிட்டு நான் சென்று விடுவேன் என்று டென்ஷனில் இளையராஜா கோபத்தை வெளிப்படுத்த, மேலும் அந்த அரங்கில் கூச்சல் சத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மைக்கை கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் கத்தாதே என இளையராஜா கூச்சலிட்டவர்களை கோபத்தில் கடுமையாக எச்சரித்தார். உடனே மேடையில் இருந்த வெற்றிமாறன் உட்பட பலரும் கூச்சலிட்டவர்களை நோக்கி கை அசைத்து அமைதி காக்க வைத்தனர். இதனை தொடர்ந்து விடுதலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் இசைஞானி இளையராஜா.

இந்நிலையில் இளையராஜா கோபம் அடையும் விதத்தில் அங்கே அரங்கில் இருந்தவர்களின் கூச்சலுக்கு காரணம் என்ன என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் விடுதலை என்பதால், பல ஊரில் இருந்து பிரியாணி கொடுத்து பேருந்துகளில், சூரி ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட அந்த கூட்டத்தினர், சூரி பெயரை யார் உச்சரித்தாலும், தலைவா ..தலைவா என கூச்சலிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த நூற்றாண்டின் மாபெரும் கலைஞன் இளையராஜா பேசுகையில் அவரை பேச விடாமல் சூரி அழைத்து வந்த ஆட்கள் தலைவா… தலைவா என்று கூச்சலிட்டால் இளையராஜாவுக்கு கோபம் வரத்தானே செய்யும் என தெரிவிக்கும் சினிமா துறையினர், இளையராஜாவின் இந்த கோபத்திற்கு காரணம், ஊரில் இருந்து சூரி அழைத்து வந்த ஆட்கள் தான் என்றும், இந்த விஷயத்தில் சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டார் சூரி என்கின்றது சினிமா வட்டாரங்கள்.